அட்லீயை முகத்திற்கு நேராக அசிங்கப்படுத்தி அனுப்பிய அல்லு அர்ஜுன்..நீயெல்லாம் ஒர்த் கிடையாது.. எதற்கு தெரியுமா.?

0

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. ராஜா ராணி படத்தில் இயக்குனராக அறிமுகமான அட்லீ, முதல் படத்திலே மிக பெரிய வெற்றியை பெற்றார். பிரபு தேவா உடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின்பு மீண்டும் சினிமாவுக்கு ரீ- என்ட்ரி கொடுத்த நயன்தாராவுக்கு ராஜா ராணி மிக பெரிய வரவேற்பை பெற்று, இந்த படத்துக்கு பின்பு தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளியாகும் படத்தின் கதைகள் அனைத்தும் ஏதாவது ஒரு படத்தில் இருந்து திருடி எடுக்கப்பட்ட கதை என்று அட்லீ மீது தொடர்ந்து விமர்சனம் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் மணிரத்தினம் இயக்கத்தில் நடிகர் கார்த்திக், மோகன், நடிகை ரேவதி நடிப்பில் வெளியான மௌன ராகம் படத்தின் கதையை சுட்டு தான் அட்லீ ராஜா ராணி படத்தை எடுத்துள்ளார் என்றும், மேலும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் கதை அட்லீ இயக்கத்தில் வெளியான தெறி படத்தின் கதை.

மேலும் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அபூர்வ சகோதரர்கள் படத்தின் கதையை சுட்டு தான் மெர்சல் படத்தை எடுத்துள்ளார் அட்லீ என்கிற விமர்சனம் எழுந்தது. பழைய படத்தின் கதையை சுட்டு, படம் எடுப்பதாக தன் மீது எழுந்த விமர்சனகளுக்கு, ஒரு முறை பதிலளித்த அட்லீ, இசையில் எப்படி ஏழு ஸ்வரங்கள் இருக்கிறதோ அதே போன்று தான் என்று அடுத்த படத்தில் இருந்து கதை திருடுவதை நியப்படுத்தி பேசினார்.

கதைகளை மட்டும் சுட்டு வந்த அட்லீ, அவர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல், பிகில் போன்ற படங்களில் இடம் பெற்ற காட்சிகள், ஹாலிவுட் படத்தில் இருந்து சுடப்பட்டது என்பது வெளியானது. ஹாலிவுட் படத்தில் இடம்பெற்ற காட்சியை சிறிதும் மாற்றம் செய்யாமல் அப்படியே காப்பி அடித்து வைத்திருந்தார் அட்லீ. ஆனால் ஆடியோ நிகழ்ச்சியில் பேசும் போது சொந்தமாக யோசித்து படம் இயக்கம் இயக்குனர் கூட அந்த அளவுக்கு பில்டப் கொடுக்க மாட்டார்கள். அட்லீ பில்டப் ஓவராக இருக்கும்.

அட்லீ இயக்கத்தில் தமிழில் வெளியான நான்கு படங்களில், முதல் இரண்டு படம் வெற்றி, அடுத்து வெளியான மெர்சல் , பிகில் போன்ற படங்களை எடுத்த தயாரிப்பு நிறுவனங்கள் அதன் பின்பு அவர்கள் தயாரிப்பில் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை, அந்த அளவுக்கு மிக பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியவர் அட்லீ. தற்பொழுது ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து படம் இயக்கி வரும் அட்லீ, தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை சமீபத்தில் சந்தித்துள்ளார்.

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா படம் செம்ம ஹிட் கொடுத்ததை தொடர்ந்து அட்லீயிடம் கதை கேட்டுள்ளார் அல்லு அர்ஜுன். படத்தின் கதையை ஓகே செய்துவிட்டு அடுத்தகட்டமாக சம்பளம் குறித்து பேசியுள்ளார், அப்போது தனக்கு இந்த படத்தை இயக்க 35 கோடி சம்பளம் வேண்டும் என அட்லீ கேட்க. நீங்களும் உங்க கதையும் அந்த அளவுக்கு ஒர்த் இல்லை என முகத்திற்கு நேராக தெரிவித்துவிட்டு அங்கே இருந்து அட்லீயை விரட்டி விட்டுள்ளார் அல்லு அர்ஜுன் என கூறப்படுகிறது.

தமிழில் இளிச்சவாயனிடம் வெச்சுக்க… எங்ககிட்ட வேண்டாம்.. ஷங்கரை எச்சரித்த தயாரிப்பாளர்.! எதற்கு தெரியுமா.?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here