மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஸ்மார்ட் திருட்டு..நீதிமன்றத்தில் நடந்த விசாரணை..சிக்கப்போவது யார்..?

0
Follow on Google News

மதுரை : மத்திய அரசின் பரிந்துரையின்பேரில் தமிழகத்தில் மதுரை உட்பட சில நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக மாற்றப்படஉள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாகா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 15 கோடி அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து மதுரையை சேர்ந்த ஒருவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில் ” ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரியார் பேருந்து நிலைய கட்டுமானப்பணிக்காக அந்த இடம் 30 அடிக்கும் மேலாக தோண்டப்பட்டது. அப்போது அங்கு வளமான மணல் கிடைத்துள்ளது. அந்த மணலை கனிமவளத்துறைக்கு தகவல் தெரிவித்தபின்னர் விற்பனை செய்யவேண்டும். ஆனால் முறைகேடாக தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.

அதன் மதிப்பு 15 கோடிக்கும் மேலாக இருக்கும். தோண்டி எடுத்த மணல் குறித்தோ அதை விற்பனை செய்தது குறித்தோ அரசின் எந்த ஒரு துறைக்கும் சொல்லாமல் தலைமை பொறியாளர் அரசு கடத்தி விற்பனையில் ஈடுபட்டிருக்கிறார். இதுகுறித்து தொடர்புடைய அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அவர் மீது ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்துள்ளது. தலைமை பொறியாளர் அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என அரவிந்த் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். நேற்று வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழக அரசிடம் விளக்க அறிக்கை கேட்டு உத்தரவிட்டுள்ளனர்.

மத்திய அரசின் ஒரு திட்டத்திலேயே அதுவும் ஒரு பகுதியிலேயே அதிகாரிகள் 15 கோடி முறைகேட்டில் ஈடுபடுகிறார்கள் எனில் மாநிலம் முழுவதும் அவ்வளவு கொள்ளையடிப்பார்கள் என பொதுமக்கள் விமர்சித்து வருகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஒவ்வொரு ஊழலாக வெளிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.