நான்கு வயது மகனுடன் இணைந்து கயறு கட்டப்பட்டு கிணற்றில் சடலமாக கிடந்த தாய்..! கரூரில் நடந்த பரபரப்பு..!

0
Follow on Google News

கரூர் : தமிழகத்தில் தற்கொலை சம்பவங்கள் கொலை சம்பவங்கள் அதிகரித்துவருவதாக நேற்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் அறிக்கை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கை வெளியிடப்பட்ட அன்றே நான்கு வயது மகனை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூர் மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கோடாங்கிபட்டி மங்கலத்தை சேர்ந்தவர்கள் அமிர்தலிங்கம் முத்துலட்சுமி தம்பதிகள். இந்த தம்பதியினருக்கு நான்கு வயதான கனிஷ் என்ற ஒரு மகன் உள்ளார். முத்துலட்சுமி தையல் இயந்திரத்தின் மூலம் எக்ஸ்போர்ட் கம்பெனிகளுக்கு துணிகளை தைத்து கொடுத்து வருகிறார். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் நடந்த ஒரு சம்பவம் அவர்கள் வாழ்க்கையை திருப்பிப்போட்டது.

முத்துலட்சுமி தனது வீட்டில் வேலைசெய்து கொண்டிருந்தபோது தவறுதலாக அவர் பயன்படுத்தும் கட்டர் ஒன்று கனிஷின் கண்களில் பட்டுள்ளது. இதையடுத்து சிறுவனை மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்திருந்தனர். அங்கு சிறுவன் கனிஷுக்கு கண் ஆபரேஷன் செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் இன்னொரு ஆபரேஷன் பண்ண வேண்டியிருந்தது.

இதனால் மனமுடைந்த முத்துலட்சுமி தினமும் தான் செய்த தவறி எண்ணி அழுதுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் முத்துலட்சுமி தனது மகன் கனிஷுடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார். வீட்டில் அவர்கள் கண்ட அமிர்தலிங்கம் தனது உறவினர்களுடன் அவர்கள் இருவரையும் தேடிவந்தார்.

இந்நிலையில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்த அமிர்தலிங்கம் தீயணைப்புத்துறைக்கு தகவலைத்தர். தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி சல்லடை போட்டு தேடியதில் கனிஷ் மற்றும் முத்துலட்சமி இருவரும் சடலமாக மீட்டெடுக்கப்பட்டனர். முத்துலட்சுமி தனது மகனை தன்னுடன் சேர்த்து கயிறு மற்றும் துணி கொண்டு கட்டியபின் கிணற்றில் குதித்துள்ளார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.