முதல் கணவரின் மகனை திருமணம் செய்த பெண்..இரண்டாவது கணவர் போலீசில் புகார்..! எங்கே தெரியுமா.?

0
Follow on Google News

உத்தரகாண்ட் : மேற்கத்திய கலாச்சாரம் இந்தியாவில் மெல்ல மெல்ல நுழைந்து தனது ஆக்டொபஸ் கரங்களால் இந்திய கலாச்சாரத்த்தின் குரல்வளையை நெரித்து வருவதாக கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் லிவ் இன் ரிலேஷன் எனும் போர்வையில் இளசுகள் அடிக்கும் கொட்டம் இந்திய பண்பாட்டை கேள்விக்குரியதாக்கி வருகிறது.

இந்நிலையில் உத்திராண்ட் மாநிலத்தில் தனது மனைவி அவரது முதல் கணவரின் மகனை திருமணம் செய்துகொண்டு தனது வீட்டிலிருந்த 20000 ரொக்கப்பணத்தை திருடிவிட்டதாக ஒருவர் புகாரளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சம்பவம் அறுவருப்பின் உச்சம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உத்தரகாண்ட் மாநிலம் பாஸ்பூர் மாவட்டம் உத்தம்சிங் நகரில் வசிப்பவர் இந்திரராம். இவர் பாஸ்புர் காவல்நிலையத்தில் ஒரு புகாரளித்தார். அந்த புகாரில் பாப்லி என்ற பெண்ணுடன் தனக்கு திருமணம் நடந்ததாகவும் இருவருக்கும் மூன்று குழந்தைகள் பிறந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் பாப்லிக்கு தான் இரண்டாவது கணவர் என தெரிவித்துள்ளார்.

மேலும் பாப்லியின் மூத்த கணவரின் மகன் தனது வீட்டிற்கு அடிக்கடிவந்துசென்றதாகவும் மகன் என்பதால் சந்தேகப்படவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார். இதனிடையே நேற்று முன்தினம் தனது வீட்டிலிருந்த 20000 ரொக்கப்பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டதாகவும் அதற்கு முன்னர் பாப்லி தனது முதல் கணவரின் மகனை திருமணம் செய்துவிட்டதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் நான் என்ன செய்யவேண்டும் என அப்பாவியாக காவல்துறையினரிடம் வினவியுள்ளார். வழக்கை எடுத்துக்கொண்ட காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஒரு தாயே தனது மகனை திருமணம் செய்ததாக கூறப்படும் இந்த விஷயம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தனது பணத்தை மனைவி திருடிவிட்டதால் அவர் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறாரா இந்திரராம் என பலகோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.