மோடி, அமித்ஷா போட்ட பலே திட்டம்.. அண்ணாமலை கர்நாடகாவுக்கு அனுப்பப்பட்ட பின்னணி இது தான்..

0
Follow on Google News

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்பு, தமிழக அரசியல் களம் திமுக – பாஜக என்கிற ஒரு சூழல் உருவாகியது. திமுகவுக்கு எதிராக சமரசமில்லாத அரசியலை அண்ணாமலை செய்து வருவது, திமுக முக்கிய அமைச்சர்கள் முதல் திமுக பிறப்புகள் வரை அண்ணாமலைக்கு பதிலடி கொடுப்பதில் தீவிர காட்டி வருகிறார்கள், அந்த அளவுக்கு தமிழக அரசியலில் திமுக மற்றும் பாஜக என அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.

திமுகவுக்கு எதிராக அரசியலை முன்னெடுத்து ஆளும் திமுக அரசுக்கு மிக பெரிய குடைச்சலை கொடுத்து வரும் அண்ணாமலைக்கு பல்வேறு குடைச்சலை கொடுத்து வருவது வெளியில் இருந்து யாரும் செயல்பட வில்லை, அண்ணாமலைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கொள்ள முடியாத பாஜகவில் இருக்கும் சிலரே பல உள்ளடி வேலைகளை அண்ணாமலைக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு டெல்லி பாஜக தலைமைக்கு அண்ணாமலை குறித்து பல்வேறு புகார்களை கொடுத்து அண்ணாமலையை மாநில தலைவர் பதவியில் இருந்து தூக்கி விட வேண்டும் என செய்யப்பட்டவர்களிடம், தமிழகத்தை பொறுத்தவரை உங்களுக்கு அருமையான தலைவராக அண்ணாமலையை கொடுத்துள்ளோம், அவரை ஏற்று கொண்டு இணைந்து பணியாற்றுவது உங்களுக்கு நல்லது என புகார் கொடுத்தவர்களை எச்சரித்தது டெல்லி தலைமை.

மேலும் கட்சி வளர்ச்சிக்காக அண்ணாமலை என்ன செய்தாலும் கேட்க மாட்டோம், என அண்ணாமலைக்கு முழு சுதந்திரம் அளித்தது டெல்லி தலைமை, அதன் அடிப்படையில் தான் காயத்ரி ரகுராம் பாஜகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார் என்கிறது பாஜக வட்டாரங்கள், இந்த நிலையில் தற்பொழுது தீடிரென கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்பட்டிருப்பது பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்ணாமலைக்கு எதிரான புகாரின் காரணமாக, கர்நாடாக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அப்படியே தமிழக அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்கான வேலையை டெல்லி பாஜக தலைமை செய்துள்ளதாக ஒரு குறிப்பிட்ட தரப்பினர் திட்டமிட்டு, அண்ணாமலைக்கு எதிராக டெல்லி பாஜக தலைமை அதிருப்தியில் இருப்பதாக ஒரு செய்தியை பரப்பி வருவது குறித்து டெல்லி பாஜக வட்டாரத்தில் உள்ள முக்கிய புள்ளிகளிடம் விசாரித்ததில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக தேர்தலை சந்திக்க இருப்பதால், அதற்கு முன்பு கூட்டணி குறித்த அரசியல் வியூகம் மற்றும் தேர்தல் கள பணியில் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கான முன் அனுபவத்திற்காக தான் அண்ணாமலை கர்நாடக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும்,

மேலும் கர்நாடகாவில் அண்ணாமலை போலீஸ் அதிகாரியாக பணியாற்றிய போது, அவருக்கென மக்கள் மத்தியில் ஒரு செல்வாக்கு இருந்தது, அது தற்பொழுது வரை தொடர்கிறது, இதனால் அண்ணாமலை கர்நாடகாவில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது பாஜக வெற்றிக்கு கூடுதல் பலம் என்பதால்,பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா ஆகியோரின் நேரடி பரிந்துரையின் அடிப்படையில் தான் அண்ணாமலை கர்நாடக செல்கிறார் என டெல்லி பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.