ரஜினி மகள் என்பதற்கு தான் உனக்கு மரியாதை… ஓவர் ஆட்டம் போட்டு அசிங்கப்பட்ட ஐஸ்வர்யா ….

0
Follow on Google News

நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஜனவரி மாதம் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, இருவரும் ஒருமனதாக பிரிவதாக அறிவித்தனர். பிரிந்த தம்பதியினர் இரண்டு குழந்தைகள் நலன் கருதி, மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனுஷ் – ஐஸ்வர்யா மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சியில் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கலந்து கொண்டனர்.ஆனால் அதிகார பூர்வமாக இருவரும் இணைவதாக இன்னும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில் கணவர் தனுஷை விட்டு பிரிந்த பின்பு முழுக்க முழுக்க சினிமாவில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் ஐஸ்வர்யா, இயக்குனராக புதிய பட வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். லைக்கா நிறுவனத்திடம் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள ரஜினிகாந்த், மேலும் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அந்த படத்தை மகள் ஐஸ்வர்யா இயக்க இயக்குகிறார்,

ஐஸ்வர்யா இயக்க இருக்கும் படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்க்கு லால் சலாம் என பெயரிடப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் இந்த படத்தில் நீண்ட தாடியுடன் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவராக நடிக்க இருக்கிறார், இந்த படத்தில் நடிகர் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், பிப்ரவரி மாதம் தள்ளி வைக்கப்பட்டது, ஆனால் தற்பொழுது பிப்ரவரி மாதமும் படப்பிடிப்பு தொடங்காமல் காலதாமதமாகி வருகிறது, இதற்கு ஐஸ்வர்யாவின் ஆணவம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது, படம் தொடங்குவதர்க்கு முன்பே அந்த படத்தில் இருந்து காஸ்ட்யூம் டிசைனர் வெளியேறியுள்ளார்.

மேலும் விரைவில் இந்த படத்தில் நடிக்க இருக்கும் விஷ்ணு விஷால் வெளியேறலாம் என்றும் கூறப்படுகிறது,படம் குறித்த டிஸ்கேஷன் நடக்கும் பொழுது, ஐஸ்வர்யா ஏற்கனவே 10 படம் வெற்றி கொடுத்து பல விருதுகளை அள்ளி குவித்துள்ளது போன்று ஆணவத்தில் நடந்து கொள்வதால், ரஜினிகாந்த் மகள் என்கிற மரியாதைக்கு தான் இந்த படத்தில் காமிட்டானாம்,என்று ஒவ்வொருவராக லால் சலாம் படத்தில் இருந்து கழண்டு வருவதாக கூறப்படுகிறது.