தில்லாலங்கடி வேலை செய்து சொகுசு வாழ்க்கை.. சொகுசு காரில் கள்ள காதலியுடன் சிக்கிய சலூன் கடைக்காரர்..!

0

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டம் சித்திரங்கோடு பகுதியில் அடகுக்கடை நடத்தி வருபவர் முதலார் பகுதியை சேர்ந்த சுரேஷ். கடந்த இருதினங்களுக்கு முன்னர் அவர் கடையில் இல்லாத நேரம்பார்த்து ஒரு இளம்பெண் தன்னை காவ்யா என கூறிக்கொண்டு தங்க வளையல் ஒன்றை அடகுவைத்துவிட்டு 30000ரூபாய் பெற்று சென்றுள்ளார். அந்த நேரத்தில் ஒரு பெண் பணியாளர் மட்டுமே கடையில் இருந்துள்ளார்.

சாப்பிட சென்றுவிட்டு மாலை சுரேஷ் கடைக்கு திரும்பியுள்ளார். பின்னர் வழக்கம்போல தனது கடைக்கு அடகுக்கு வந்த நகைகளை சோதனையிட்டுள்ளார். அதில் காவ்யா என்ற அந்த பெண் அடகுவைத்த வளையல் மட்டும் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்துள்ளது. அதை உன்னிப்பாக சோதனை செய்துபார்த்ததில் போலி என்பதை அறிந்துகொண்ட அவர் உடனடியாக கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்துள்ளார்.

அதில் ஒரு சொகுசு காரில் ஒரு ஆணும் பெண்ணும் வந்துள்ளனர், அதில் அந்த பெண் மட்டும் அடகுக்கடைக்குள் நுழைந்து அடகுவைத்து சென்று மீண்டும் காருக்குள் எறியுள்ளார். இந்த சிசிடிவி ஆதாரங்களுடன் கொற்றிக்கோடு காவல்நிலையத்தில் சுரேஷ் புகாரளித்தார். இந்நிலையில் நேற்று வழக்கமான சோதனையில் வேர்கிளம்பி பகுதியில் போலீசார் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் வந்த சொகுசு கார் ஒன்றை மடக்கினர். அப்போது பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன. கார் ஓட்டிவந்தவர் ஜேசுராஜா என்பதும் அவர் செட்டிகுளம் பகுதியில் சலூன்கடை நடத்திவருவதும் தெரியவந்தது. தனது கள்ளக்காதலி அனுஷாவுடன் சேர்ந்து கேரளாவில் இருந்து கவரின் நகைகளை வாங்கியுள்ளனர்.

பின்னர் அதை கன்னியாகுமரி பகுதியில் உள்ள சிறுசிறு அடகுக்கடைகளை தேடி அங்கு தங்கம் என கூறி அடகு வைத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். தனது மனைவிக்கு மூன்று மாடி பங்களாவை பரிசளித்துள்ளார் இந்த ஜேசுராஜா. கள்ளகாதலியுடன் சுற்றுலா மனைவிக்கு பங்களா என சொகுசுவாழ்க்கை வாழ்ந்த ஜேசுராஜாவையும் வேர்கிளம்பி போலீசார் நேற்று கைதுசெய்து சிறையிலடைத்துள்ளனர். தலைமறைவான அனுஷாவை தீவரமாக தேடி வருகின்றனர்.