சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா… கெஸ்ட் ரோலில் கமல்ஹாசன்… பட்டைய கிளப்பும் புதிய படத்தின் அப்டேட்..

0
Follow on Google News

சென்னை : நடிகர் சிவகுமாரின் வாரிசான சூர்யா நேருக்குநேர் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நுழைந்தார். ஆரம்பகால படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்திருந்தாலும் இயக்குனர் பாலா டைரக்சனில் வெளிவந்த நந்தா திரைப்படம் சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்தது. அதை தொடர்ந்து காக்ககாக்க பிதாமகன் என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை சூர்யா தக்கவைத்துக்கொண்டார்.

மேலும் அவரது படங்கள் கமர்ஷியலாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்று தயாரிப்பாளர்களின் செல்லப்பிள்ளை ஆனார். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்திருந்த ஜெய்பீம் திரைப்படம் அவரை உச்சிக்கு அழைத்துச்சென்றது. அதேபோல தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் திரைப்படத்தில் ரோலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார்.

அந்த கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். இதுகுறித்த அறிவிப்பு தற்போது வந்துள்ளது. இயக்குனர் பாலா படத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சூர்யா 42 படத்தை சிறுத்தை சிவா இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஏற்கனவே வீரம் விஸ்வாசம் போன்ற படங்களை அஜித்தை வைத்து கமர்ஷியலாக ஹிட் அடித்த சிவா சூர்யா 41 திரைப்படத்தை இயக்க இருப்பதை அறிந்த ரசிகர்கள் படம் எப்போ ரிலீஸ் என இப்போதே கேட்கத்தொடங்கிவிட்டனர். இந்த திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் கதாநாயகியாக பிரபல ஹிந்தி நடிகை ஒருவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனை கெஸ்ட் ரோலில் நடிகைவைக்கலாமா என தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் தரப்பு யோசித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பியுள்ளன. மேலும் இசையமைப்பாளராக அனிருத் அல்லது டி.இமான் பேசப்படுவார்கள் என கூறப்படுகிறது.

நாக்கை புடுங்கிற மாதிரி கேள்வி கேட்ட ரசிகர்…. திக்குமுக்காடி போன ரஜினி என்ன பதில் சொன்னார்