அண்ணாமலையிடம் மல்லு கட்டிய பத்திரிகையாளர். .. இன்றைய பரிதாப நிலை என்ன தெரியுமா.?

0

தமிழக அரசியலில் சுமார் 50 வருடங்களாக திமுக – அதிமுக இரண்டு கட்சிகள் தவிர்த்து வேறு எந்த ஒரு கட்சியும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அதிமுக – திமுக இரண்டு கட்சிகளுக்கு மாற்றாக யாராவது வர மாட்டார்களா.? என்று ஒரு தமிழக மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் நடிகர் விஜயகாந்த் புதியதாக கட்சி தொடங்கிய 2006 சட்டமன்றத் தேர்தலில் தனியாக களம் கண்டார்.

2006 தேர்தலில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற உறுப்பினராகவும் மேலும் தமிழ்நாடு முழுவதும் தனக்கான வாக்கு வங்கியை தனித்துவத்துடன் நிரூபித்து அதிமுக – திமுக இரண்டு கட்சிக்கு மாற்று தான் விஜயகாந்த் தான் என்பதை தமிழக மக்களும் தீர்ப்பாகவே தேர்தல் மூலம் வழங்கினர்.அடுத்து 2001 தேர்தலில் விஜயகாந்த உடன் கருணாநிதி – ஜெயலலிதா இருவரும் கூட்டணி வைக்க போட்டி போட்டு கொண்டிருக்க அதிமுக உடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராகி அடுத்த தமிழக முதல்வர் விஜயகாந்த் தான் என்கிற நிலையை உருவாக்கினார்.

இப்படி அரசியலில் அசூர வளர்ச்சியை நோக்கி உயர்ந்த விஜயகாந்த் அரசியல் வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்ததில் ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு என்கின்ற விமர்சனம் தற்பொழுது வரை இருந்து வருகிறது. விஜயகாந்தை குறிவைத்து அவர் கோபம் அடையும் வகையில் கேள்வி எழுப்புவது, பின்பு அவர் கோபத்தில் பேசுவதை, அல்லது ஊடகவியாளர்களிடன் சண்டையிடுவதை திரும்ப திரும்ப தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விஜய்காந்தை பெருமளவில் டேமேஜ் செய்தது சில ஊடகங்கள்.

இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு பல அணிகளாக உடைந்து தற்பொழுது அதிமுக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்த சூழலில், திமுகவுக்கு மாற்றாக அண்ணாமலை தலைமையிலான பாஜக தான் என்கின்ற ஒரு கருத்து மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன்பு விஜயகாந்தை குறிவைத்து தாக்கியது போன்று அண்ணாமலையும் குறி வைத்து தாக்க தொடங்கிவிட்டனர் குறிப்பிட்ட சில ஊடகங்கள்.

ஆனால் விஜயகாந்த்திடம் விளையாடிய பத்திரிகையளர்களின் சித்து விளையாட்டு அண்ணாமலையிடம் எடுபடவில்லை, அவர்கள் கேட்கும் எடக்கு முடக்கான கேள்விகளுக்கு அண்ணாமலை கேட்கும் எதிர் கேள்விகளால் பத்திரிகையாளர்களால் பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டு வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் குறிப்பிட்ட ஒரு சில ஊடகவியலாளர்களுக்கும் அண்ணாமலைக்கும் இடையில் மிகப்பெரிய வாக்குவாதம் நடைபெற்றது.

செய்தியாளர் சந்திப்பு முடிந்து அண்ணாமலை அறைக்கு அழைத்துச் சென்ற அந்த ஊடகவியலாளரிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது கூட வாக்குவாதம் நடைபெற்ற வீடியோவும் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட அந்த அந்த தொலைக்காட்சியின் உரிமையாளர் இந்த சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், அண்ணாமலை மீது எந்த தவறும் இல்லை, அவர் ஒரு சிறந்த சிறந்த தலைவர் என்றும் பாராட்டியவர்.

கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர் மீது உள்ள குறைகளையும் சுட்டிக் காட்டி இருந்தார் அந்த தொலைக்காட்சியின் உரிமையாளர். இந்த நிலையில் தொலைக்காட்சி உரிமையாளரே அண்ணாமலைக்கு ஆதரவாகவும் மல்லுக்கட்டிய பத்திரிக்கையாளரின் தவறை சுட்டிக்காட்டி பேசியிருந்தால், அந்த தொலைக்காட்சியில் வேலை செய்யும் அந்த பத்திரிக்கையாளரின் நிலை என்ன என்பது குறித்து அந்த நிறுவனத்திற்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்தோம்.

அதில், அன்னமலையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளருக்கு மட்டுமன்றி அந்த தொலைக்காட்சியில் வேலை செய்யும் மற்ற அனைவரரிடமும் அண்ணாமலையிடம் மீண்டும் இது போன்று நடந்து கொள்ள கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். மேலும் எந்த ஒரு அரசியல் கட்சியும் உங்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை, அதனால் சில அரசியல் கட்சிகளுக்கு விசுவாசமாக இருப்பதை தவிர்த்து சம்பளம் கொடுக்கும் நிறுவனத்திற்கு விசுவசமாக நடுநிலையாக உங்கள் பணியை செய்யுங்கள் என்று அனைவரும் அறிவுறுத்த பட்டதாக கூறப்படுகிறது.

Light off செய்துருப்பான்.. இதற்கும் அண்ணாமலை தான் காரணம்… காயத்ரி சொன்ன புதிய குற்றசாட்டு