லேப் டாப்பை திறந்து காண்பித்த விஜய்.. எங்களை என்ன நினைச்சீங்க.. அதிர்ந்து போன முக்கிய அரசியல் புள்ளி..

0
Follow on Google News

விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் பொழுது அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனையை மேற்கண்டனர். இதனை தொடர்ந்து நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜயை தட்டி தூக்கி சென்னைக்கு அழைத்து வந்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள்.நெய்வேலியில் இருந்து தனது சொந்த வாகனத்தில் வருவதற்கு கூட அனுமதிக்காத வருமான வரி துறை அதிகாரிகள், வருமான வரி துறைக்கு சொந்தமான வாகனத்தில் அழைத்து வந்தனர்.

இந்த வருமான வரித்துறை சோதனை வரை அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்த விஜய், இந்த சோதனைக்குப் பின்பு எந்த ஒரு அரசியல் கருத்துகளும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்து வந்தார். இதற்கு காரணம் வருமான வரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதால், மத்திய அரசு நடிகர் விஜய்யை மிரட்டி வருவதாகவும், அதனால் அவர் அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பதை நிறுத்தி விட்டதாக கூறப்பட்டது.

ஆனால், இத்தனை நாட்களாக புலி பதுங்கியது பாய்வதற்கு தான் என்பது போல தன்னுடைய அரசியல் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கி விட்டார் நடிகர் விஜய், சமீபத்தில் விஜய் அவருடைய விஜய் மக்கள் இயக்கம் நிர்வாகிகளை நேரில் அழைத்து சந்தித்து அவர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்து வந்தது, விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் வாரிசு படத்தை ஓட வைப்பதற்கு தான் என்று பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

ஆனால் அது வாரிசு படத்திற்கான சந்திப்பு கிடையாது, அரசியலுக்கான சந்திப்பு என்பது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் மிக முக்கிய அரசியல் புள்ளி ஒருவரை சந்திக்க விரும்பிய விஜய், அவருடைய மக்கள் இயக்க தலைவர் புஷி ஆனந்தை அந்த முக்கிய அரசியல் புள்ளியை நேரில் சந்தித்து அவரை தான் சந்திக்க விரும்புவதாக கூறி நேரில் அழைத்து வர செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து அந்த முக்கிய அரசியல் புள்ளியுடன் சமீபத்தில் சந்திப்பு நடத்திய விஜய், சுமார் 4 மணி நேரம் இன்றைய தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் களம் இறங்க தயாராக இருப்பதாகவும் விஜய் தெரிவித்துள்ளார், அதற்கு அந்த அரசியல் முக்கிய புள்ளி, அடிமட்டத்தில் வேலை செய்வதற்கு தொண்டர்கள் வேண்டும். அதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி விட்டு பின்பு அரசியலில் இறங்குங்கள் என தெரிவித்துள்ளார்.

உடனே விஜய் ஒரு லேப்டாப்பை திறந்து அவருடைய மக்கள் இயக்கம், கிராமங்கள் தோறும் ஒவ்வொரு பூத் வாரியாக கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளதையும், மேலும் அடுத்தடுத்து பூத் கமிட்டி அமைக்கப்பட்டு வருவதையும் காண்பித்து தங்களுடைய, விஜய் மக்கள் இயக்கம் அடிமட்டத்தில் வலிமையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விஜய்.

இதனைத் தொடர்ந்து அரசியலில் செலவு செய்வதற்கு பணம் அதிகமாக வேண்டும் என்று அந்த அரசியல் புள்ளி தெரிவிக்க, அதற்கு விஜய் பணம் தங்களுக்கு ஒரு பிரச்சனையே கிடையாது என்றும் பதில் அளித்துள்ளார். இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் முழு பலத்துடன் விஜய் அரசியலில் இறங்க உறுதியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், அதற்கு முன்பு நாடாளுமன்றத் தேர்தலில் அரசியலில் களம் காண தயாராக இருப்பதாகவும், அதற்கான வேலைகளை மிக தீவிரமாக செய்து வருவதாக கூறப்படுகிறது.