எடப்பாடிக்கு டெப்பாசிட் கூட தேறாது… வெளியானது ஈரோடு இடைதேர்தல் சர்வே ரிப்போர்ட்..

0
Follow on Google News

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவித்த உடனே திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள பெரும்பாலான திமுக அமைச்சர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு, ஆளுக்கு ஒரு பகுதியாக பிரித்து தேர்தல் பணிகளை மிக தீவிரமாக செய்து வருகிறார்கள்.

ஆனால் அதிமுக கூட்டணிக் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் மற்றும் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவருக்கும் இடையிலான மோதல் காரணமாக கடும் இழுபறிக்கு பின்பு அதிமுகவின் எடப்பாடி அணியின் சார்பில் வேட்பாளர் உறுதி செய்யப்பட்டு, தற்போது தேர்தல் பணிகளை அதிமுகவினர் தொடங்கியுள்ளார்கள்.அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் இருந்த மிகப்பெரிய குழப்பம், அது தேர்தல் களத்தில் மிகப்பெரிய பின்னடைவை அதிமுக வேட்பாளருக்கு ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக பாஜகவுக்கும் எடப்பாடி அணியினருக்கும் கடந்த சில மாதங்களாகவே இருந்து வந்த உரசலின் உச்ச கட்டம் தற்பொழுது தேர்தலில் அதிமுக எடப்பாடி அணியினர் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளருக்கு எதிராக திரும்பியுள்ளதை பார்க்க முடிகிறது. திருமங்கலம் பார்முலாவை ஈரோடு இடைதேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கடைபிடிக்க இருப்பதாக வெளியான தழுவலின் அடிப்படையில், கட்சி நிலைப்பாடு இல்லாத பொதுமக்கள் வாக்குகளை முழுமையாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் அறுவடை செய்வது உறுதியாகியுள்ளது.

பாஜக மீது எடப்பாடிக்கு இருந்து வந்த உரசல், மற்றும் திமுகவுக்கு மாற்று எடப்பாடி என்பதை மக்கள் ஏற்று கொள்ள விரும்பாததால், திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்து அது, அதிமுக வேட்பாளருக்கு மிக குறைந்த அளவில் சென்றாலும் பெரும்பாலும் நாம் தமிழர் கட்சி மற்றும் நோட்டவுக்கு விழுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருப்பதை ஈரோடு இடைதேர்தல் களத்தில் பார்க்க முடிகிறது.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடிக்கு இடையிலான பிரச்சனையும் மற்றும் கூட்டணி கட்சியான பாஜக மற்றும் இதர கட்சிகளுக்கு இடையில் எடப்பாடிக்கு உள்ள முரண்பாடுகளும் தற்பொழுது ஈரோடு இடைத்தேர்தல் காரணமாக தற்காலிகமாக தான் சமூக முடிவு ஏற்பட்டுள்ளது, ஆனால் ஈரோடு இடைத்தேர்தல் முடிந்த பின்பு இந்த முரண்பாடுகளும் மோதலும் தொடரும் என்பதால் தேர்தல் களத்தில் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி அதிமுகவினர் கூட தேர்தல் பணிகளில் மிக சோர்வாக காணப்படுகிறார்கள்.

தமிழகத்தில் எங்குமே செல்வாக்கு இல்லாத அரசியலில் காலாவதியான ஜி கே வாசன் போன்றோரை அருகில் வைத்து மெகா கூட்டணி என தம்பட்டம் அடித்த எடப்பாடிக்கு இந்த ஈரோடு இடைத்தேர்தல் முடிவு என்பது மிகப்பெரிய சம்பட்டி அடியாக இருக்கப் போகிறது என்கின்றது சர்வே ரிப்போர்ட். இதுகுறித்து ஈரோடு தொகுதி மக்களிடம் நமது குழுவினர் எடுத்த கருத்து கணிப்பில், எடப்பாடி தலைமையிலான ஒரு கட்சியை திமுகவுக்கு மாற்று என்பதை ஏற்க மறுக்கிறார்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு நடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தல் முடிவுகள் போன்று தான் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் அமையும் என்று தெரிய வருகிறது. எப்படி ஆர் கே நகர் இடைத்தேர்தலில் திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழக்க நேரிட்டதோ, அதேபோன்றுதான் தற்பொழுது ஈரோடு இடைத்தேர்தலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு டெபாசிட் இழக்கும் சூழல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இடண்டாவது இடத்திற்கு நாம் தமிழர் கட்சி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது போன்று உள்ளது ஈரோடு கிழக்கு தொகுதியின் மக்களின் கருத்துக்கள். எதிரிகளே இல்லை என்கிற சூழல் ஈரோடு இடைதேர்தலில் உருவாகியுள்ளதால், பெரும் வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெரும் என சர்வே ரிப்போர்ட் தெரிவிக்கிறது, அந்த வகையில் இடண்டாவது இடத்தை பிடித்து டெபாசிட்டை தக்க வைத்தால் போதும் என்கிற மனநிலையில் தான் எடப்பாடி தலைமையிலான அதிமுகவினரின் தேர்தல் பணிகள் இருக்கிறது என கள நிலவரம் தெரிவிக்கிறது குறிப்பிடத்தக்கது.