நன்றி மறந்த சூர்யா… கை கொடுத்து தூக்கி விடும் அருண் விஜய்யின் கடவுள் மனசு..

0
Follow on Google News

நடிகர் சூர்யாவை தமிழ் சினிமாவுக்கு அடையாளப்படுத்தியவர் இயக்குனர் பாலா, அதன் பின்பு சூர்யாவை ஒரு மாஸ் ஹீரோவாக காக்க காக்க படத்தில் அடையாளப்படுத்தியவர் கௌதம் வாசுதேவ மேனன். அவரைத் தொடர்ந்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் ஆக்சன் ஹீரோவாக அடுத்தடுத்து படங்களில் ஹரி இயக்கத்தின் நடித்து தனக்கென பெரும் ரசிகர் வட்டத்தை உருவாக்கினார் சூர்யா.

சமீபத்தில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து தோல்வி சந்தித்து வருகிறது.மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் நடிகர் சூர்யா நடிப்பில் வணங்கான் படத்தை பாலா இயக்கிய வந்தார், ஆனால் சூர்யா மற்றும் பாலா இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் அடுத்து பாலாவின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியாக இருந்த நிலையில் சூர்யாவுடன் ஓரளவு இறங்கி வந்து மீண்டும் இந்த வனங்கான் படத்தை எடுப்பதற்கான பல முயற்சிகள் பாலா மேற்கொண்டார். ஆனால் சூர்யா படம் பாதியிலே நின்றாலும் பரவாயில்லை, என்று கண்டு கொள்ளாமல் தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் மிகப்பெரிய இயக்குனராக இருந்த பாலாவின் சினிமா வாழ்க்கை மிகப்பெரிய கேள்விக்குறியான நிலையில,அவருடைய நெருங்கிய நண்பர் இயக்குனர் AL விஜய் ஏற்பாட்டில் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் அருண் விஜய் விஜய் நடிக்க இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இதற்கு முன்பு நடிகர் சூர்யாவால் கண்டுகொள்ளாமல் கழட்டிவிட்ட ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடித்து ஹரிக்கு உதவியாக இருந்தவர் அருண் விஜய்,அதேபோன்று தற்பொழுது சூர்யாவால் பாலா கழட்டிவிட்ட நிலையில் அருண் விஜய் அவர் படத்தில் நடிப்பதற்காக சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவால் கழட்டிவிடும் இயக்குனர்களுக்கு அருண் விஜய் கை கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது