விடிவதற்குள் பாஜகவினரை கைது செய்த விடியல் அரசு… விருதுநகரில் நடந்த கைது வேட்டை… எதற்கு தெரியுமா.?

0

விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரவுள்ள சுமார் 150 கோடி மதிப்பிலான ஜவுளி தொழில் பூங்காவை உடனே அமைய ஏற்பாடு செய்ய வேண்டும், மேலும் இந்த திட்டம் விருதுநகர் மாவட்டத்தில் வருவதற்கு எந்த ஒரு முயற்சியும் திமுக எடுக்கவில்லை என பாஜக குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த திட்டத்திற்கு திமுக தொழில்த்துறை அமைச்சர் திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தடையாக இருப்பதாக பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் குற்றசாட்டு வைத்துள்ளார்.

இந்நிலையில் மத்திய அரசு அறிவித்துள்ள 150 கோடி மதிப்பிலான ஜவுளி தொழில் பூங்காவை உடனே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேராசிரியர் தலைமையில் சிவகாசியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபயணமாக சென்று, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு கொடுக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு தொடங்கி பாஜகவினரை கைது செய்ய தொடங்கியுள்ளது போலீசார் என கூறப்படுகிறது.

மேலும் இந்த பேரணியில் தலைமையேற்று நடத்த முதல் நாள் இரவே சிவகாசி சென்று தங்கியிருந்த பேராசிரியரை, அதிகாலை அவர் தங்கியிருந்த ஓட்டலில் வைத்தே கைது செய்துள்ளது போலீசார். இது குறித்து பேராசிரியர் கூறுகையில். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பாஜக தலைவர்களையும், தொண்டர்களையும் விடிவதற்குள் கைது செய்துள்ளது விடியல் அரசு.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி மற்றும் சாத்தூரிலும் மத்திய அரசு ஜவுளி பூங்காக்கள் அமைய இருக்கும் இந்த வேலையில், ஏதோ சில காரணங்களை காட்டி அந்த தொழில் பூங்காவையே இந்த விருதுநகர் மாவட்டத்தில் அமைக்காத படி ஒரு சூழலை திமுகவினர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். தொழில்துறை அமைச்சரின் அவர் சொந்த தொகுதியான திருச்சுழி சட்டமன்ற தொகுதிக்குள் தொழில்துறை பூங்கா வருவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது மட்டுமில்லாமல், அந்தப் பூங்கா வருவதற்கு தடையாகவும் இருக்கின்றார் என பாஜக பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறது என தெரிவித்த பேராசிரியர்.

மேலும், இது தொடர்பாக சிவகாசியில் இருந்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பாதயாத்திரையாக சென்று மாவட்ட ஆட்சியர் இடம் மனு கொடுக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில். ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் சிவகாசியில் குவிய தொடங்கினார்கள். இதை தடுக்கும் வகையில் ஆனால் பக்கத்து மாவட்ட த்திலிருந்து காவல்துறையை வரவழைத்து, கார் மற்றும் பேருந்துகளில் வந்து கொண்டிருந்த பாஜக தொண்டர்களை நள்ளிரவு கைது செய்துள்ளது கடுமையான கண்டனத்திற்குறியது என தெரிவித்த பேராசிரியர்.

இதுபோன்ற கைது நடவடிக்கையால் பாஜகவினரை முடக்கி விட முடியாது, இந்த அரசு மக்கள் விரோத அரசு என்பதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம். இது சமூகவிரோதிகள் நடத்தும் போராட்டம் கிடையாது, தேச பக்தர்களால் விருதுநகர் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய மத்திய அரசின் ஜவுளி பூங்காவை கொண்டு வருவதற்காக திமுகவை வலியுறுத்தும் போராட்டம். இந்தப் போராட்டத்தின் நியாயம் பற்றி விரைவில் மக்கள் புரிந்து கொள்வார்கள், திமுகவின் போலி திரை கிழித்தெறியப்படும் என கைது செய்யப்பட்டுள்ள பாஜக மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார்.