திமுக – பாஜக கூட்டணி… ஓரமாக ஒட்டி கொள்ளும் அதிமுக… தமிழக அரசியலில் எதிர்ப்பாராத டிவிஸ்ட்…

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு தமிழக அரசியலில் எதிர்பாராத பல மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. கடந்த 10 வருடங்களாக திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள், 2026 சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்தடுத்த நாட்களில் திமுகவுக்கு கல்தா கொடுத்து விட்டு தவெக பக்கம் சாய்ந்து விட்டனர்.

தற்பொழுது திமுக கூட்டணியில் இருக்கும் வைக்கோவும் தவெக பக்கம் செல்வதற்கு தயாராகி விட்டார். இப்படியான ஒரு சூழலில் திமுக தனித்துவிட்டபட்டு பரிதாபத்தில் உள்ளது. இதில் NDA கூட்டணியில் இடம் பெற்ற பாமக, அமமுக , பாஜக, போன்ற கட்சிகளுக்கு தங்களுக்கென ஒரு கட்டமைப்பு தமிழகத்தில் உள்ளது அவர்களுக்கென வாக்கு வங்கியும் உள்ளது, அந்த வகையில் அதிமுகவில் சில சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெறுவதற்கு அதன் கூட்டணி கட்சிகளும் காரணம்.

ஆனால் திமுக கூட்டணியில் இடம் பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு தேடி தேடி பார்த்தாலும் ஊருக்கு நாலு பேர் இருப்பார்களா என்பதே சந்தேகம், இதில் கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மக்கள் நல கூட்டணி என்கிற ஒரு கூட்டணியை அமைத்து, விஜயகாந்த் அரசியலை முடிவுக்கு கொண்டு வந்த விடுதலைக்கு சிறுத்தைகள், வைகோ, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் 2016 தேர்தலிலே காலாவதியாகி போன போன கட்சிகள்.

இப்படி ஊருக்கு நாலு பேர் இல்லாத காங்கிரஸ் கட்சி, 2016ல் காலாவதியான கம்யூனிஸ்ட், வைகோ, விசிக போன்ற கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வந்து உயிர் கொடுத்தது திமுக, குறிப்பாக திமுக கூட்டணி காட்சிகளை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற செய்வதற்கும், சட்டசபையில் வெற்றி அடைய செய்வதற்கும் வியர்வை சிந்தி உழைத்ததவர்கள் திமுக தொண்டர்கள்.

இப்படி தங்களுக்கு அரசியலில் மறு வாழ்வு கொடுத்த திமுக தேர்தலில் மிக பெரிய சரிவை சந்தித்து இருக்கும் இந்த நேரத்தில், அவர்களுக்கு தோளோடு தோழாக நிற்க வேண்டிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் , விசிக போன்ற கட்சிகள் திமுகவுக்கு கல்தா கொடுத்து தவெக பக்கம் சென்று விட்டனர், இதில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக முயற்சி செய்தது.

ஆனால் ராகுல் காந்தியை பிரதமராக்குவது தான் எங்கள் குறிக்கோள் என பஜக உடன் கூட்டணிக்கு திமுக மறுத்து விட்டது. அப்படி பாஜக உடன் திமுக கூட்டணி அமைத்து இருந்தால், மத்திய அமைச்சரவையில் திமுக இடம் பெற்று இருக்கும். இந்நிலையில் தற்பொழுது திமுக தனித்து விடப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு துரோகம் விளைவித்த காங்கிரஸ் கட்சிக்கு தக்க பாடம் புகட்ட தயாராகி கொண்டிருக்கிறது.

திமுக – பாஜக இடையிலான மேல்மட்ட கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாக சென்று கொட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, அடுத்து ஒரு வருடத்தில் திமுக – பாஜக கூட்டணி உறுதியாக வாய்ப்புகள் மிக பிரகாசமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை இழந்து இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கும் அதிமுக ஒரு ஓரமாக திமுக – பாஜக கூட்டணியில் இடம் பெறுவதற்கு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் திமுக – பாஜக கூட்டணியுடன் களம் காண இருப்பதாகவும், குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற இருப்பதால், 2029 நாடாளுமன்ற தேர்தல் உடன் தமிழக சட்டசபைக்கான தேர்தலும் ஒன்றாக நடத்த அதிக வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here