பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனியாக கட்சி தொடங்கினால் யாருக்கு பாதிப்பு என ஆய்வு செய்த ரிப்போர்ட், முதல்வர் விஜய்யை ஷாக் அடைய செய்துள்ளது. குறிப்பாக விஜய்க்கு எப்படி இவ்வளவு பெரிய வாக்கு வங்கி கிடைத்தது, இதன் பின்னணி காரணம் என்ன என்பது குறித்து இரண்டு திராவிட கட்சிகள் மட்டுமில்லை, தேசிய கட்சியான பாஜகவும் ஆய்வு செய்து ஆடி போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
1971ல் எம் ஜி ஆர் திமுகவில் விலகி காலம் தொட்டு, தமிழகத்தில் திமுகவை சுற்றி தான் அரசியல் இருந்து வந்துள்ளது. குறிப்பாக திமுக எதிர்ப்பு என்பது தமிழக அரசியலில் தவிர்க்க முடியாதது, அப்படி ஒரு சூழலில் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு திமுகவுக்கு எதிரான தலைவர் இல்லாமல் வெற்றிடத்தை பயன்படுத்தி 2021ல் ஆட்சியை பிடித்தது திமுக , இது மக்களுக்கு விருப்பம் இல்லாத ஆட்சியாகவே பார்க்க பட்டது.

இப்படியான ஒரு சூழலில் திமுகவுக்கு எதிரான ஒரு இடத்தை நிரப்பும் வகையில் அண்ணாமலை அரசியலில் என்ட்ரி கொடுக்கிறார், திமுகவுக்கு எதிராக தன்னுடைய அரைசியலை தீவிரப்படுத்துகிறார், திமுக எதிர்ப்பு வாக்குகளை தன் இழுக்கிறார், மேலும் இளைஞர்கள் அண்ணாமலையின் அரசியல் பேச்சுக்களால் கவரப்பட்டு பாஜக பக்கம் கூட்டம் கூட்டமாக படையெடுக்க தொடங்கினார்கள்.
மிக குறுகிய காலத்தில் சினிமா பின்புலம் இல்லாமல் தமிழகத்தில் தனித்துவமான தலைவராக உருவெடுத்த ஒரே தலைவர் அண்ணாமலை என்கிற வரலாற்று சாதனைக்கு சொந்தமானர் அண்ணாமலை, பாஜகவை யாரும் கூட்டணி சேர்க்கமாட்டார் என்கிற காலம் சென்று பாஜக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்து, சுமார் 18 சதவிகித வாக்கு வங்கியை நிரூபித்து காண்பித்தார் அண்ணாமலை.
இதற்கு முக்கிய காரணம் திமுக எதிர்ப்பு மற்றும் இளைஞர்களின் வாக்கு, அதுவரை தமிழக இளைஞர்களின் நம்பிக்கையாக அண்ணாமலை திகழ்ந்து கொண்டிருக்க விஜய் புதியதாக கட்சி தொடங்கினாலும் அரசியல் ரீதியாக கவர கூடிய வகையில் அவருடைய செயல்பாடுகள் இல்லை. இப்படியான ஒரு சூழலில், பாஜக தலைவராக அண்ணாமலை மாற்றம் செய்யப்படுகிறார், அடுத்து திமுக எதிர்ப்பு என்பது தமிழக அரசியில் மெல்ல காணாமல் போனது.
இப்படியான ஒரு சூழலில் அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்த ஒரு கூட்டம் மெல்ல விஜய் பக்க திரும்ப தொடங்கியது, குறிப்பாக விஜய் பேசிய அந்த வசனம், இங்கே இருவருக்கு தான் போட்டி ஓன்று திமுக மற்றொண்டு தவெக, மேலும் தொடர்ந்து ஸ்டாலின் அங்கிள் என ஸ்டாலினுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் தன்னை நிலை நிறுத்தி கொண்டார் விஜய், இதனை தொடர்ந்து திமுகவுக்கு மாற்று விஜய் தான் என்கிற மனநிலைக்கு வந்தனர் தமிழக மக்கள்.
மேலும் எடப்பாடி பழனிசாமியை தமிழக மக்கள் புறந்தள்ள ஆரம்பித்தனர், இதன் வெளிப்பாடு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் என்கிற ஒற்றை மனிதன் பக்கம் மாற்றத்தை நோக்கி மக்கள் திரும்பினார்கள், குறிப்பாக இளைஞர்கள் நம்பிக்கையும் விஜய் பக்கமே இருந்தது, சுமார் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறார் விஜய்.
இப்படியான ஒரு சூழலில் அண்ணாமலை தனி கட்சி தொடங்கினாள் சுமார் 65 சதவிகிதம் விஜய்க்கு தான் ஆபத்து என்றும், விஜய் பக்க இருக்கும் இளைஞர்கள் வாக்குகள், திமுக எதிர்ப்பு வாக்குகள் அண்ணாமலை பக்கம் செல்லும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இளைஞர்களை கவர கூடிய தலைவர் அண்ணாமலை என்பதால் அண்ணாமலை புதிய அரசியல் கட்சி என்பது விஜய்க்கு தான் ஆபத்தாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

