மோசடி வழக்கில் சிக்கும் புதுமண தம்பதியினர்… நோட்டிஸ் அனுப்பிய பிரபல நிறுவனம்… என்ன மோசடி தெரியுமா.?

0
Follow on Google News

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 7 வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ம் தேதி இருவரும் சென்னை மகாபலிபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த அடுத்த சில நாட்களில் தாய்லாந்து சென்று ஹனிமூன் கொண்டாடிய புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பியதும் சினிமாவில் இருவரும் பிசியானார்கள். நயன்தாரா மும்பையில் ஷாருகான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார்.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் இவர்களின் திருமணத்தை சுமார் 25 கோடிக்கு விலை பேசி பிரபல OTT நிறுவனமான நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்துள்ளனர். முதலில் இவர்கள் இருவரும் திருப்பதி கோவிலில் திருமணம் செய்ய இருப்பதாக இருந்த நிலையில் தங்களது திருமணத்தையும் வியாபாரமாக்கி சம்பாரித்து விடலாம் என திட்டமிட்டவர்கள். அது திருப்பதியில் நடந்தால் படப்பிடிப்பு போன்ற வசதிகளுக்கு செட் ஆகாது எனபதால் திருப்பதியில் திருமணம் செய்யும் முடிவை கைவிட்டனர்.

நெட்பிலிக்ஸ் நிறுவனத்திடம் பெரும் தொகைக்கு விலை பேசிய போது, ஆரம்பக்கட்டத்தில் இவ்வளவு விலை கொடுத்து வாங்குவதர்க்கு அந்த பிரபல நிறுவனம் தயக்கம் காட்டியுள்ளது. ஆனால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தரப்பில், தற்பொழுது விக்னேஷ் சிவன் புதிய படத்தில் நடிகர் அஜித் உடன் கமிட்டாகியுள்ளார், மேலும் நயன்தாராவும் அஜித் உடன் ஜோடியாக சேர்ந்து பல படங்கள் நடித்துள்ளார்.

ஆகையால் எங்கள் திருமணத்திற்கு உறுதியாக அஜித் கலந்து கொள்வார், அதே போன்று நடிகர் விஜய் , சிவகார்த்திகேயன் போன்ற முன்னனி நடிகர்கள் கலந்து கொள்வார்கள். அவர்கள் ரசிகர்கள் மத்தியில் தங்களுடைய திருமணத்துக்கு மிக பெரிய வரவேற்பு இருக்கும் என நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி உறுதியளிக்க. ஒரு கட்டத்தில் சுமார் 25 கோடிக்கு இவர்களின் திருமண நிகழ்ச்சியை ஒருபரப்ப நெட்பிலிக்ஸ் நிறுவனம் வாங்கியது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கான அணைத்து செலவுகளையும் நெட்பிலிக்ஸ் நிறுவனமே ஏற்று கொண்டது, மேடை அலங்காரம் அமைப்பதில் தொடங்கி, நயன்தாராவுக்கான மேக்கப் வரை அணைத்து செலவுகளையும் நெட்பிலிக்ஸ் நிறுவனமே செய்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு எதிர்பார்த்த படி, அஜித், விஜய், சிவகார்த்திகேயன், கமல் , தமிழக முதல்வர் என முக்கிய பிரபலகங்கள் யாருமே வரவில்லை.

இதனால் நயன்தாரா திருமணத்தில் எதிர்பார்த்த வரவேற்பு மக்கள் மத்தியில் இல்லை. இதனை தொடர்ந்து, நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நிகழ்வை 25 கோடி கொடுத்து வாங்கும் அளவுக்கு முக்கிய பிரபலங்கள் யாரும் முன்வரவில்லை. அதனால் மிக குறைந்த விலைக்கு கேட்டுள்ளது நெட்பிலிக்ஸ் நிறுவனம் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு நயன்தாரா – விக்னேஷ் சிவன் ஜோடி மறுத்துள்ளனர், மேலும் வேறு ஒரு நிறுவனத்திடம் நெட்பிலிக்ஸ் வாங்குவதாக இருந்த 25 கோடிக்கு பேசி விற்க முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் யாரும் இந்த திருமண நிகழ்வை வாங்க முன்வரவில்லை. இதனை தொடர்ந்து திருமண நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரபலகளின் புகைப்படத்தை வெளியிட்டால் அது திருமண நிகழ்வுக்கான ப்ரோமோஷனாக இருக்கும், இதை வைத்து அதிக விலைக்கு வாங்க OTT நிறுவனங்கள் முன் வருவார்கள் என திட்டமிட்டு திருமணம் நிகழ்வில் கலந்து கொண்ட முக்கிய பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டார் விக்னேஷ் சிவன்.

ஆனால் எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை,எந்த ஒரு நிறுவனமும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் தற்பொழுது நெட்பிலிக்ஸ் நிறுவனம், நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு செலவு செய்த பணம் மற்றும் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப கொடுத்ததாக கூறப்படும் முன்பணம் ஆகியவற்றை திருப்பி தரும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் முடிவுக்கு வரவில்லை என்றால் நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீது மோசடி வழக்கு பதியப்படலாம் என கூறப்படுகிறது.

பாலா – சூர்யா உச்சகட்ட மோதலால் வணங்கான் படத்தில் ஏ.எல்.விஜய் என்ட்ரி… பாலாவின் நிலைமை