கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் பேபி சூர்யா, சிக்கா மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் புகார்.

0

கீழக்கரையை சேர்ந்த எம் எம் கே முகைதீன் இப்ராகிம் என்பவர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம், கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் பேபி சூர்யா, சிக்கா போன்றோர் மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் என்றும், இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் தெரிவித்துள்ளார், அவர் அளித்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது.

சமீப காலமாக வலைத்தளங்களில் ஆபாச பேச்சு வீடியோ பதிவுகள் அதிக அளவில் வலம் வருகிறது, தற்போது ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்காதலால் மாணவர்கள் கல்வி கற்பதற்கு இணையத்தில் அதிக நேரம் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி யூடியூப் பேஸ்புக்டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அப்பாவி மாணவர்களை வழிகெடுத்து.

அவர்களை ஆபாச வலைதளங்களுக்கு அடிமையாக்கி பணம் சம்பாத்திக்கும் நோக்கில் சிலர் 1. ஜி பி முத்து, 2. திருச்சி சாதனா, 3. பேபி சூர்யா, 4. சிக்கா என்ற சிக்கந்தர் மேலும் பலர் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையில் பல்வேறு வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளனர் . இதனை இலட்சக்கணக்கானோர் காண்கின்றனர். இவர்களின் உடல் பாவனைகளும், பேச்சுக்களும் தமிழ்; நாட்டில் கலாச்சாரம் மற்றும் சமூக சீரழிவை ஏற்படுத்தும்,

குறிப்பாக இதை காணும் சிறுவர் சிறுமிகளின் மனதை பாதிப்படைய செய்யும் வகையில் ஆபாச பதிவுகள்
உள்ளது. இளைய சமுதாயத்தை பாதிக்கும் இத்தகைய இணையதளங்களை கண்டறிந்து அவற்றை தடை செய்ய வேண்டும், மாணவர்கள் மத்தியில் விஷத்தை பரப்பும் கொடிய உள்ளம் கொண்ட ஆபாச பேர்வழிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இது போன்ற பதிவுகள் மேலும் தொடராமல் பாதுகாக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சில பதிவுகளின் இணைய முகவரியுடன் நகல் இத்துடன் இணைத்துள்ளேன் என புகார் தெரிவித்த நபர் அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார், இந்த புகார் மனுவின் நகலை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.