இரண்டு நடிகைகளை காதலித்து மூன்றாவதாக லதாவை திருமணம் செய்த ரஜினிகாந்த்..! யார் அந்த முன்னால் காதலிகள் தெரியுமா.?

0

நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டவர், லதாவை காதலித்து திருமணம் செய்வதற்கு முன்பு இரண்டும் நடிகைகளை காதலித்து திருமணம் வரை சென்றுள்ளார் நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் உச்சநடிகராக உயர்ந்த பின்பு. தன்னுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை ஸ்ரீதேவியை காதலித்து வந்துள்ளார்,அப்போது நேரடியாக ஸ்ரீதேவி வீட்டுக்கு சென்றவர் அவருடைய அம்மாவை நேரில் சந்தித்து பெண் கேட்டுள்ளார்.

இதற்கு ஸ்ரீதேவி அம்மா தனது மகள் சாதிக்க வேண்டியது இன்னும் அதிகமாக இருக்கிறது, உங்களுக்கு முன்பே சில மதங்களுக்கு முன்பு நடிகர் கமல்ஹாசன் எனது மகளை திருமணம் செய்ய பெண் கேட்டு வந்தார், நான் அதற்கு முடியாது என்று தெரிவித்து விட்டேன், அதே பதிலை தான் உங்களுக்கும் தெரிவிக்கிறேன், தற்போதைக்கு எனது மகள் திருமணம் அவசியம் இல்லை என ரஜினிகாந்த்க்கு பெண் கொடுக்க ஸ்ரீதேவி அம்மா மறுத்துவிட்டதாக கூறபடுகிறது.

இவரை தொடர்ந்து நடிகை லதாவை நடிகர் ரஜினிகாந்த் காதலித்து வந்துள்ளார், ஒரு கட்டத்தில் லதாவும் ரஜினிகாந்தை காதலிக்க தொடங்கியுள்ளார், இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக கூட அப்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது, இவர்கள் காதலிப்பது அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். கவனத்துக்கு சென்றுள்ளது, ரஜினிகாந்தை லதா காதலிப்பது எம்.ஜி.ஆர் க்கு பிடிக்கவில்லை.

இதனை தொடர்ந்து எம்ஜிஆர் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் ரஜினிகாந்த்- லதா இருவரும் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்த இந்த ஜோடியை பிரிக்க அப்போதைய கர்நாடக முதல்வராக இருந்த குண்டு ராவ் முயற்சித்து பின் இந்த காதல் ஜோடி பிரிந்துள்ளது. இதன் பின்னனியில் எம் ஜி ஆர் இருந்ததாக கூறபடுகிறது.

இதன் பின்பு தன்னை பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவை காதலித்த ரஜினிகாந்த், இரு குடும்பம் ஒப்புதலுடன் திருமணம் செய்து கொண்டார். கல்லூரி மாணவியாக பேட்டி எடுக்க வந்த லதா பெயரும் தனது முன்னாள் காதலி பெயரும் ஒரே மாதிரியாக இருப்பதால் ரஜினிகாந்த் இவர் மீது காதலில் விழுந்ததாக கூறப்படுகிறது, திருமணத்துக்கு முன் பல்வேறு சர்ச்சையில் சிக்கிய ரஜினிகாந்த், திருமணத்துக்கு பின் எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.