எனக்கே விபூதி அடிக்க பாத்துருக்க…. எடப்பாடிக்கு போன் போட்ட அமித்ஷா… இனி வாழ்நாள் முழுவதும் ஜெயில் தான்…

0
Follow on Google News

தமிழக அரசியலில் முதுகில் குத்தி முன்னேறிய அரசியல் துரோகி என பலரால் விமர்சனம் செய்ய கூடிய ஒரு நபர் தான் எடப்பாடி பழனிச்சாமி, பாஜக தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றம் செய்துவிட்டு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக உடன் பாஜக கூட்டணி அமைத்த போதே, பாஜக நலம் விரும்பிகள் பலரும் சொன்ன தகவல் எடப்பாடி பழனிச்சாமி என்பவருக்காக அண்ணாமலையை பாஜக தலைமை பொறுப்பில் இருந்து மாற்றியது வரலாற்றில் மிக பெரிய தவறை செய்து விட்டது.

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி யாருக்குமே நேர்மையாக இருந்தது கிடையாது, தவழ்ந்து சசிகலா காலில் விழுந்து முதல்வராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலை வாரியவர் தான், ஓ பி எஸ் முதுகில் குத்தியவர், டி டி வி தினகரன் முதுகில் குத்தியவர், கடந்து 2024 நாடளுமன்ற தேர்தலில் பாஜகவில் முதுகில் குத்தியவர், இப்படி பட்ட ஒருவரை நம்பி மீண்டும் பாஜக கூட்டணி வைக்க கூடாது என பலரும் அறிவுறுத்தி இருந்தனர்.

ஆனால் தமிழகத்தில் திமுகவை வீழ்த்தியே தீரவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்துடன் பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலையை மாற்றம் செய்து விட்டு எடப்பாடி தலைமையிலான அதிமுக உடன் கூட்டணி அமைத்தது பாஜக, ஆனால் தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்த்தது போன்று திமுக தோல்வியை தழுவி ஆட்சி மாற்றம் நடைபெற்றது, ஆனால் பாஜக எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் இல்லை, விஜய் தலைமையிலான ஆட்சி மாற்றம்.

இதில் குறிப்பாக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அண்ணாமலை தலைமையிலான பாஜக கூட்டணி அப்படியே தொடர்ந்து நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலை சந்தித்து இருந்தால் பாஜக எதிர்க்கட்சியாக அமர்வதற்கு கூட வாய்ப்பு அமைந்து இருக்கும், ஆனால் எடப்பாடி என்கிற காலாவதியான குதிரையில் ஏறி பாஜகவும் மிக பெரிய தோல்வியை சந்தித்து, 11 சதவிகித வாக்கு வங்கியில் இருந்து 3 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது.

இப்படி ஒரு சூழலில் திமுகவை வீழ்த்த வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்கு எடப்பாடி உடன் பாஜக கூட்டணி அமைந்த நிலையில் , தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு பாஜகவுக்கே தெரியாமல் திமுக உடன் கூட்டணி அமைத்த ஆட்சி அமைக்க எடப்பாடி முயன்ற செய்து டெல்லி பாஜக தலைமைக்கு சென்று இருக்கிறது, குறிப்பாக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவருக்கு இந்த தகவல் எடப்பாடி மீது கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆனால் வழக்கம் போல் முதுகு குத்துவதில் வல்லவரான எடப்பாடி பழனிச்சாமி பாஜக முதுகில் குத்திவிட்டு திமுக உடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க அதிமுக முக்கிய தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க, எடப்பாடி திட்டம் அனைத்துமே தோல்வியை தழுவியது, இதனை தொடர்ந்து எஸ் பி வேலுமணி, சி வி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையிலான பெரும்பாலனான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தனர்.

இப்படி ஒரு சூழலில் அதிமுக கட்சி தற்பொழுது எடப்பாடி கைவசம் இருந்து போகி, எஸ் பி வேலுமணி தரப்புக்கு செல்லும் சூழல் உருவாகி இருக்கிறது. இதனை தொடர்ந்து டெல்லி கதவை தட்டி உதவி கேட்டு இருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி, ஆனால் டெல்லி கதவை திறக்க வில்லை. மாறாக அமித்ஷா தரப்பை எடப்பாடி தொடர்பு கொள்ள முயன்ற போது அங்கிருந்து கடுமையான வார்த்தைகள் பதிலாக அமைந்து இருக்கிறது.

அமித்ஷா தரப்பில் இருந்து எடப்பாடியிடம் பேசியவர்கள், நீங்கள் திமுக உடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வர முயற்சி செய்தது எல்லாம் தெரியும், திரும்ப டெல்லி கதவை தட்ட வேண்டாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். இந்நிலையில் எடப்பாடி மீது உள்ள கொடநாடு கேஸ் தூசு தட்டப்படுவதாகவும், இனி எடப்பாடிக்கு ஜெயில் தான் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here