பாஜக கட்சிக்கு நஷ்டம் …. பாஜக வேட்பாளருக்கு லாபம்… பல கோடி சுருட்டல் … வெளியான ஷாக் ரிப்போர்ட்…

0
Follow on Google News

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 27 தொகுதியில் போட்டியிட்ட தமிழக பாஜக வெறும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது, குறிப்பாக தமிழகம் முழுவதும் விசில் புரட்சி என்றால், தமிழக பாஜக ஊட்டியில் மட்டும் வெற்றி பெறுவதற்கு என்ன காரணம்.? அந்த வேட்பாளரின் தனிப்பட்ட செல்வாக்கு காரணமா அல்லது ஊட்டியில் பாஜக வலுவாக இருக்கிறதா.? அல்லது தவெக அலை ஊட்டியில் இல்லையா.?என ஊட்டி ஒரு தொகுதியின் பாஜக வெற்றியை வைத்து டெல்லி பாஜக தலைமை விசாரணையை தொடங்கி இருக்கிறது.

இதில் பல தகவல்கள் டெல்லி பாஜக தலைமைக்கு சென்று இருக்கிறது, குறிப்பாக பாஜகவில் இருக்கும் குறிப்பிட்ட ஒரு வேட்பாளர் தேர்தலில் போட்டியிடுவதை ஒரு வியாபாரமாகவே செய்து வந்ததும், அதற்கான ஆதாரமும் டெல்லி பாஜக தலைமைக்கு சென்று இருக்கிறது. குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி கொண்டு, தேர்தலுக்கு ஒரு வருடத்திற்கு முன்பே குறிப்பிட்ட ஒரு தொகுதியில் போட்டியிட போகிறேன் என்று ஒரு ரவுண்டு தொழில் அதிபர்களிடம் வசூல் வேட்டை நடத்துவது,

தேர்தலில் சீட் கிடைத்த பின்பு தேர்தல் செலவுக்கு என்று வசூல் வேட்டை நடத்துவது இப்படி வசூல் வேட்டை நடத்தியே ஒரு குறிப்பிட்ட வேட்பாளர் பல கோடி சுருட்டி, கட்சியில் 2015 காலகட்டத்தில் இணையும் போது கார் கூட இல்லாமல் ஸ்கூட்டியில் வந்த அவர் இன்று கோடீஸ்வரராக உயர்ந்து இருக்கிறார் என்கிற தகவலும் டெல்லி பாஜக தலைமைக்கு சென்று இருக்கிறது.

குறிப்பாக தமிழ் கடவுள் குடியிருக்கும் தொகுதியில் நடந்த இடைதேர்தலில் 2016 காலகட்டத்தில் போட்டியிட்டு டெபாசிட்டை பறி கொடுத்த அந்த முக்கிய புள்ளி, தொழில் அதிபர்களிடம் வசூல் வேட்டை நடந்த வேண்டும் என்றால் தன்னை கட்சியில் அதிகாரமிக்கவராக காட்டி கொள்ள வேண்டும், தான் மனசு வைத்தால் மத்திய அரசில் எதையும் சாதிக்க முடியும் என்பதை தொழில் அதிபர்கள் நம்பவேண்டும் என்பதற்கான முயற்சியில் இறங்கிய அந்த நபர் அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தின் குட்டி ஜப்பான் என்று அழைக்க கூடிய பகுதியில் இருக்கும் தொழில் அதிபர்களிடம், கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, உங்க தொகுதியில் நான் தான் போட்டியிட போகிறேன், அந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும் , இந்த நிகழ்ச்சி நடத்த வேண்டும், டெல்லிக்கு போக வேடனும், மக்களுக்கு நலத்திட்டம் வழங்க வேண்டும் என தொழில் அதிபர்களிடம் மட்டுமில்லாமல் கட்சி நிர்வாகிகளிடமும் அட்ட பூச்சி ரத்தத்தை உறிஞ்சுவது போன்று வசூல் வேட்டை நடத்தி இருக்கிறார் அந்த வசூல் மன்னன் .

ஆனால் என்னவோ கடைசி நேரத்தில் அவருக்கு எதிர்பார்த்த அந்த குட்டி ஜப்பான் என்று அழைக்க கூடிய தொகுதியை கட்சி தலைமை ஒதுக்கவில்லை, இதன் பின்பு தேர்தலில் சீட் கிடைத்து விடும், வேட்பாளர் பட்டியல் அறிவித்த உடனே தேர்தல் செலவுக்கு பல கோடி வசூல் செய்ய பல தொழில் அதிபர்களிடம் துண்டு போட்டு வைத்து இருந்தோமே என்கிற விரக்தியில் எனக்கு தமிழ்நாட்டில் எதாவது ஒரு தொகுதியை கொடுங்க என்று பெற்று கோவில் மாநகரில் சீட் வாங்கி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் அந்த வசூல் மன்னன் என்று அழைக்கப்படும் வேட்பாளர்.

கட்சி தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தில் ஒரு பகுதியை வேட்பாளர் செலவுக்கு வேண்டும் என்று சுருட்டி கொண்ட அந்த வசூல் மன்னன், மேலும் ஏற்கனவே பேசி வைத்திருந்த தொழில் அதிர்பர்களிடம் வசூல் வேட்டை நடத்தி கல்லா கட்டினார். இதன் பின்பு அடுத்த வசூலுக்கான 2026 சட்டசபை தேர்தலுக்கு தயாரான அந்த வசூல் மன்னன் 2024ல் பின்பற்றிய அதே பார்முலாவை பின்பற்றி திருவிழாவுக்கு பெயர் போன அந்த கோவில் மாநகரில் மீண்டும் போட்டியிட்டு பல கோடி பார்த்து விட்டார் என்கிற ரிப்போர்ட் டெல்லிக்கு சென்று இருக்கிறது.

குறிப்பாக இவர் தேர்தலில் போட்டியிடுவதே வசூல் செய்ய தான் என்றும், 2015ல் SCOOTY யில் வந்தவரின் பல கோடி சொத்துக்களை பாருங்கள் என்கிற ஆதாரத்துடன் அந்த வசூல் மன்னன் எங்கெல்லாம் பல கோடி மதிப்பில் சொத்துக்களை வாங்கி குவித்து வைத்து இருக்கிறார் என்பது குறித்த ரிப்போர்ட் டெல்லி தலைமைக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here