பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி தனியாக அமைப்பு தொடங்கிய மிக குறுகிய காலத்திலேயே சுமார் 18 லட்சம் பேர் தங்களை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் புதிய அமைப்பை மட்டும் தொடங்கி இருக்கும் அண்ணாமலையின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுகள் என்ன என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் பல விறுவிறுப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது.
அண்ணாமலை தொடங்கி இருக்கும் புதிய அமைப்பில் இதுவரை தொகுதி வாரியாக எவ்வளவு பேர் இணைந்து இருக்கிறார்கள் என்கின்ற ஆய்வு பணிகள் சமீபத்தில் அந்த அமைப்பினர் ஈடுபட்டிருக்கிறார்கள். அதில் சுமார் 42 தொகுதிகளில் தலா 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட உறுப்பினர்கள் அந்த அமைப்பில் தங்களை தாமாக வந்து இணைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அந்த அமைப்பினருக்கு கொடுத்திருக்கிறது.

குறிப்பாக சுமார் 42 தொகுதிகளில் தல 30,000 என இணைந்திருக்கும் அந்த உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் ஒருவருக்கு தலா கூடுதலாக ஒரு வாக்குகளை அந்த தொகுதிகளில் பெற வைத்தாலே சுமார் 42 தொகுதிகளில் 60 ஆயிரத்துக்கு மேல் வாக்குகளை அண்ணாமலை தொடங்க இருக்கும் புதிய கட்சி பெற்று விடும். அந்த வகையில் இன்னும் அரசியல் கட்சியே தொடங்காத அண்ணாமலைக்கு தற்பொழுதே சுமார் 42 சட்டமன்றத் தொகுதிகள் கைவசம் உறுதியாகிவிட்டது என தற்பொழுது அவர் தொடங்கி இருக்கும் அமைப்பின் இணைந்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை வைத்து கணித்து கூறப்படுகிறது.
ஒவ்வொரு தொகுதிகளுக்கும் ஒவ்வொரு கட்சி அலுவலகம் தொடக்கும் பணிகள் ஆயத்தமாக தொடங்கி இருக்கிறார்கள், அதாவது முப்பது ஆயிரத்திற்கு மேல் உறுப்பினர் சேர்ந்த தொகுதிகளில் அலுவலகம் அமைக்கும் பணியை முதல் கட்டமாக தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது, மேலும் அடுத்த மாதம் கட்சியின் கொடியை அண்ணாமலை அறிமுகம் செய்ய இருப்பதாகவும்ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலைமை அலுவலகம் திறக்கவும் திட்டமிட்டு இருக்கிறார் அண்ணாமலை என்ற தகவல் வெளியாகிறது. இந்த வருட இறுதிக்குள் சுமார் 50 லட்சம் உறுப்பினர்களை இணைத்து அதன் பின்பு கட்சியை தொடங்க திட்டமிட்டு இருக்கிறார் அண்ணாமலை என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.
அதே நேரத்தில் அவருடைய நோக்கம் 2031 சட்டசபை தேர்தல் தான் என்றும் அதற்கு முன்பு வரும் நாடாளுமன்ற தேர்தலில் மற்றும் இதர தேர்தலில் போட்டியிட போவதில்லை என கூறப்படுகிறது . ஆனால் உள்ளாட்சி தேர்தலில் அவர் அமைப்பின் சார்பாக பலரும் போட்டியிட வாய்ப்புள்ளது என்கின்ற தகவலும் வெளியாகி உள்ளது.
மேலும் அண்ணாமலை புதிய கட்சி தொடங்குவதற்கு முன்பு யாருக்கும் எந்த பொறுப்பும் வழங்கப்படாது என்றும், எந்த ஒரு முக்கிய அரசியல் தலைவர்கள் இந்த அமைப்பில் இருந்தாலும் அவர்கள் வெறும் உறுப்பினராகவே புதியதாக கட்சி தொடங்கும் வரை பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அண்ணாமலை, முதலில் அமைப்பில் இணைந்து தன்னை அர்ப்பணித்து கொள்ளட்டும், அடுத்து புதியதாக கட்சி தொடங்கியதும் பொறுப்பு வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி பலரும் மாற்று கட்சியில் இணைந்து வரும் நிலையில், அண்ணாமலை புதியதாக கட்சி தொடங்கியதும் அதிமுகவில் இருந்து சுமார் 20 சதவிகிதம் முக்கிய தலைவர்கள் அண்ணாமலை தொடங்க இருக்கும் புதிய கட்சியில் இணைய இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டது என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.

