முதல்வருக்கே பாடம் எடுத்த சௌம்யா… சில நிமிடம் ஆடி போன CM விஜய்… வேற லெவல் சம்பவம்….

0
Follow on Google News

தமிழக சட்டப்பேரவையில் பல எம் எல் ஏக்கள் பேச்சுக்களில், சிலர் மட்டுமே அரசியலை தாண்டி, மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைத்து பேசுகிறார்கள். அந்த வகையில், ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவையில் எழுந்து பேசும் போது மக்களின் அன்றாட வாழ்க்கையோடு தொடர்புடைய விஷயங்களை மட்டுமே முன்வைத்து கவனத்தை ஈர்த்து வருபவர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி.

பிறந்தநாள் கொண்டாடி வரும் முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து தனது உரையை தொடங்கிய சௌமியா அன்புமணி, வழக்கமான அரசியல் விமர்சனங்களில் நேரத்தை செலவிடாமல், நேரடியாக சமூகநீதி கணக்கெடுப்பு குறித்து பேசத் தொடங்கினார். சமூகநீதி தொடர்பான தரவுகளை சேகரிக்க அரசு எடுத்துள்ள முடிவு பலரிடமும் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர்,

இருளில் இருக்கும் ஒரு அறைக்கு சிறிய விளக்கு கூட ஒளி கொடுப்பதைப் போல இந்த அறிவிப்பும் மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டார். உண்மையில் சட்டப்பேரவையில் பலர் அரசியல் குற்றச்சாட்டுகளிலும், தேவையற்ற விவாதங்களிலும் நேரத்தை செலவிடும் சூழலில், மக்களின் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் பிரச்சினைகளை மட்டும் தொடர்ந்து முன்வைத்து பேசும் சில உறுப்பினர்களில் சௌமியா அன்புமணியும் ஒருவர் என்பதே அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

அதேபோல் விவசாயிகளின் நிலை குறித்து பேசிய சௌமியா அன்புமணி, ன் தமிழகத்தில் தொடர்ந்து விவசாயிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் வேதனையை ஏற்படுத்தி வரும் நிலையில், மகாராஷ்டிராவில் செய்யப்பட்டதைப் போல தமிழகத்திலும் முழுமையான பயிர் கடன் தள்ளுபடியை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார்.

இதோடு நிற்காமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பற்றியும் தனது கவலையை பதிவு செய்தார். ஆட்சி மாற்றம் நடந்த பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் முழுமையாக குறையவில்லை என்றால், அதில் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது என்று சுட்டிக்காட்டினார்.

பெண்கள் மீது நடைபெறும் அநீதிகளுக்கு எதிராக சமூகம் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். குறிப்பாக, சௌமியா அன்புமணி பேசும் ஒவ்வொரு முறையும், அவரது உரையில் அரசியல் சண்டைகள் அல்லது தனிப்பட்ட விமர்சனங்கள் அதிகம் இடம் பெறுவதில்லை. மக்களுக்கு என்ன தேவை, எந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு தேவை, அரசு எந்த துறையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே அவர் தொடர்ந்து பேசிவருகிறார்.

அதனால்தான், சட்டப்பேரவையில் சௌமியா அன்புமணி பேசும்போது முதலமைச்சர் விஜய் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. உண்மையில், அரசுக்கு எதிராக இருப்பவர்களின் பேச்சு என்பதற்காக அனைத்தையும் புறக்கணிக்காமல், மக்களுக்கு பயன் தரக்கூடிய கருத்துகளை ஏற்று செயல்படுத்தும் மனப்பான்மை இருந்தால் தான் வளர்ச்சி வேகமாகும்.

அந்த வகையில், விவசாயிகள், பெண்கள் பாதுகாப்பு, சமூகநீதி மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை பிரச்சினைகள் குறித்து சௌமியா அன்புமணி முன்வைக்கும் ஆலோசனைகள் செயல்படுத்தப்பட்டால், அது தர்மபுரிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக வளர்ச்சிக்கும் ஒரு புதிய பாதையை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.