“ஏன்டா இந்த Vijay-அ தொட்டோம்.. ஏண்டா இந்த விஜய் கூட இருக்க மக்களை தொட்டோம் , நினைச்சு நினைச்சு Feel பண்ண போறீங்க” என தேர்தலுக்கு முன்பு விஜய் பேசி இருந்தார், குறிப்பாக முதல்வர் விஜய் அப்போது இப்படி பேசியதற்கு முக்கிய காரணம் கரூர் சம்பவம் தான், தவெக தரப்பில் கரூர் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது பல்வேறு குற்றசாட்டுகளை அப்போதே அடுக்கி இருந்தார்கள்.
குறிப்பாக கரூர் சம்பவத்துடன் விஜய் அரசியலை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என செய்ததாக கடும் விமர்சனங்கள் கூட அப்போதைய ஆளும் திமுக அரசை நோக்கி எழுந்தது, குறிப்பாக விஜய் கரூரில் பேசி கொண்டிருந்த போதே நடத்த செருப்பு வீச்சு சம்பவம், அதுவும் விஜய் எப்போது பாட்டிலுக்கு பத்து ரூபாய் பாடலை பாட தொடங்கினாரோ அப்போது நடந்த செருப்பு வீச்சு சம்பவம்.

காரூர் சம்பவம் நடந்த அடுத்து சில மணி நேரத்தில் அப்போதைய ஆளும் தரப்பு அமைச்சர்கள் உடனே மருத்துவமனை வந்தது, குறிப்பாக கருர் விவகாரத்தை திட்டமிட்டு விஜய் ஏதோ குற்றம் செய்தது போன்று அவரை நோக்கி திருப்பி விட முயற்சி செய்தது, என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியது, இப்படி பல்வேறு இடையூறுகளை எதிர்கொண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்து இருக்கிறார் விஜய்.
இந்நிலையில் வழக்கம் போல் அதிமுக – திமுக மாதிரி அதிமுக ஆட்சியில் நடந்த முறைகேடுகளை திமுக கண்டு கொள்ளாமல் கடந்து செல்வதும், அதிமுக ஆட்சியில் திமுகவினரின் முறைகேடுகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதுமாக இல்லாமல், “ஏன்டா இந்த Vijay-அ தொட்டோம்.. ஏண்டா இந்த விஜய் கூட இருக்க மக்களை தொட்டோம் , நினைச்சு நினைச்சு Feel பண்ண போறீங்க” என தேர்தலுக்கு முன்பு சொன்னதை செய்ய தொடங்கி இருக்கிறார் முதல்வர் விஜய்.
அதில் தற்பொழுது முதல்வர் விஜய்யின் முதல் டார்கெட் செந்தில்பாலாஜி தான் என்கிற தகவல் வெளியாகி உள்ளது, செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் ஆகியோரை மிக தீவிரமாக போலீசாரை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் விஜய். குறிப்பாக செந்தில்பாலாஜி உறவினர்களும் சேர்ந்து கண்காணிக்க பட்டு வருவதாக கூறப்படுகிறது.
செந்தில்பாலாஜி தொலைபேசி உரையாடல், கால் ஹிஸ்டரி , மெசேஜ் என மிக தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் இவருடைய வழக்குகள் அனைத்தையும் தூசி தட்டவும், இவர்கள் மீது இருக்கும் புகார்களுக்கு FIR பதிவு செய்யவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழக உளவு துறைக்கு செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் ஆகிய இருவரையும் மிக தீவிரமாக கண்காணிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஜூலை மாதம் முதல் வாரத்திற்குள் செந்தில் பாலாஜி மற்றும் அவருடைய சகோதரர் அசோக் குமார் இருவரும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என மிக தீவிரமாக இருக்கிறாராம் முதல்வர் விஜய்.
மேலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டால் அவருக்கு பெயிலே கிடைக்க கூடாது என்றும், அந்த அளவுக்கு அவருக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருக்க வேண்டும் என காவல்த்துறை உயர் அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறாராம், அந்த வகையில் செந்தில் பாலாஜி தலைமறைவாக கூடும் என்கிற தகவலும் ரெக்கை கட்டி பறந்து வருவது குறிப்பிட்த்தக்கது.

