நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக அடைந்த படுதோல்வி குறித்து தொடர்ந்து தோல்விக்கான காரணம் என்ன என்பதை திமுக தலைமை ஆய்வு செய்து வருகிறது. குறிப்பாக சென்னை திமுக கோட்டையாக விலகி வந்த நிலையில் சேகர் பாபு மற்றும் உதயநிதி ஆகிய இருவரை தவிர சென்னையில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனைவரும் தோல்வியை தழுவி உள்ளார்கள், இதில் உச்சகட்டமாக முக ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியிலும் தோல்வியை தழுவி இருக்கிறார்.
இந்நிலையில் சென்னையில் திமுகவினர் மொத்தமும் தோல்வியை தழுவி இருக்கும் நிலையில் உதயநிதி மற்றும் சேகர் பாபு மட்டும் எப்படி வெற்றி பெற்றார் என்கிற ஆய்வும் செய்து இருக்கிறது திமுக தலைமை, குறிப்பாக சேகர் பாபு மட்டும் எப்படி வெற்றி பெற்றார் என்கிற ஆய்வில் திமுக தலைமைக்கு, குறிப்பாக திமுக முதல் குடும்பத்திற்கு கடும் கோபத்தை வரவழைக்கும் வகையில் சேகர் பாபு குறித்து பல தகவல் சென்று இருக்கிறது.

இதனை தொடர்ந்து கடந்த திமுக ஆட்சியில் துர்கா ஸ்டாலினுக்கு ஜால்ரா அடித்தே முதல் குடும்பத்தை நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறார் என்கிற கோபம் முதல் குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. இதனை தொடர்ந்து சேகர்பாபுவை சமீபத்தில் அழைத்து லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார் துர்கா ஸ்டாலின். சென்னை மொத்தமும் உங்கள் கட்டுப்பாட்டில் இருந்தது எப்படி திமுக படுதோல்வியை சந்தித்தது என சரமாரியாக கேள்வி எழுப்பி இருக்கிறார் துர்கா ஸ்டாலின்.
குறிப்பாக எழும்பூரில் பரந்தாமன் போட்டியிட்டால் அவர் தோல்வி அடைவதற்கு என்னெல்லாம் வேலை செய்யவேண்டுமோ, அதை அனைத்தையும் செய்வேன் என்று சொன்னீர்களாமே, அப்படியானால் என்னுடைய கணவர் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைய பல உள்ளடி வேலைகளை செய்து இருக்கிறீர்களா என தன்னுடைய கோபத்தை சேகர் பாபுவிடம் துர்கா ஸ்டாலின் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மா சுப்பிரமணியனை ஓரம் கட்டிவிட்டு உங்கள் கட்டுப்பாட்டில் சென்னையை ஒப்படைத்தது தான் முதல் தவறு, உங்கள் பவரை பயன்படுத்தி பலரின் தோல்விக்கு வேலை செய்து இருக்கிறீர்கள், எங்களிடம் தொகுதி குறித்து ஒவ்வொரு முறையும் ரிப்போர்ட் கொடுக்கும் பொழுது தவறான ரிப்போர்ட்டை எதற்காக கொடுத்தீர்கள், இது கூட இருந்தே குழிபறிக்கும் செயல் இல்லையா எனவும் சேகர் பாபுவிடம் துர்கா ஸ்டாலின் கேட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கொளத்தூர் தொகுதி திமுகவுக்க்கு சாதகமாக இல்லை என்கிற தகவலை மறைத்து, அதெல்லாம் நன்றாக இருக்கு என எங்களிடம் பொய் சொல்லி இருக்கிறீர்கள், உண்மையை சொல்லி இருந்தால் திருவாரூர் தொகுதியில் என் கணவரை போட்டியிட செய்து இருப்போம், அவரும் வெற்றி பெற்று இருப்பார், கடைசியில் நாங்கள் உங்களுக்கு கொடுத்த பவரை வைத்து, எங்களையே காலி செய்து இருக்கிறீர்கள் என சேகர் பாபு மீது கோபத்தை துர்கா ஸ்டாலின் வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் தொடர்ந்து சென்னையில் இருக்கும் திமுக முக்கிய புள்ளிகள் துர்க்கா ஸ்டாலின் மற்றும் அவர்கள் குடும்ப உறுப்பினர்களை சந்தித்து சேகர் பாபு மீது பலவேறு புகார்களை அடுக்கி வருவது, எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றுவது போன்று சேகர் பாபுவின் மாவட்ட செயலாளர் பதவியும் கூட பறிபோகும் சூழல் தற்பொழுது திமுகவில் ஏற்பட்டு இருக்கிறது என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தற்பொழுது திமுகவில் இருந்து விலகி மாற்று கட்சியில் இணையும் முடிவில் சேகர் பாபு இருப்பதாகவும், அதற்காக பாஜகவில் அவர் பேசி வருவதாக கூறப்படும் நிலையில், பாஜக தரப்பில் இருந்து சரியான பதில் வராததால் , அரசியலில் தொடர்வோமே அல்லது அரசியலில் இருந்து ஒதுக்கி கொள்வோமா என்கிற முடிவில் சேகர் பாபு இருப்பதாக கூறப்படுகிறது.

