முதல்வர் விஜய் சட்டசபையில் பேசுகையில் “மக்கள் பணத்தில் இருந்து ஒருபைசா கூட தொடமாட்டோம். தொடவும் விட மாட்டோம், இதற்கு முன்னால் தொட்டவர்களையும் விடமாட்டோம்.. என பேசியது இதற்கு முன்பு கடந்த கால ஆட்சியில் மக்கள் பணத்தை தொட்டவர்களை தட்டி தூக்க தயாராகிவிட்டார் முதல்வர் விஜய் என்பதை எளிதாக கணிக்க முடிந்தது. குறிப்பாக முதல்வர் பேசிய பேச்சில் பார்ட்டி பண்ட் என்கிற ஒரு வார்த்தை ஒட்டு மொத்த திமுக கூடாரத்தையே கதி கலங்க செய்துள்ளது.
ஏற்கனவே முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேருவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற அமலாக்க சோதனையில், சுமார் 1200 கோடி ரூபாய் வரை பார்ட்டி பண்ட என்கிற பெயரில் அவர் வகித்த நகர்ப்புற வளர்ச்சி துறை மூலம் நடந்த டெண்டரில் கண்டுபிடித்து இருக்கிறது அமலாக்க துறை என கூறப்படுகிறது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் டாஸ்மாக் மூலம் பல ஆயிரம் கோடி ஊழல் நடைபெற்று வருவதாக அப்போதைய நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடிய மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் கடந்த ஆட்சியில் மட்டுமே சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடைபெற்று இருக்கிறது என்றும், அதில் சுமார் 20 சதவிகிதம் வரை பார்ட்டி பண்ட் என்கிற பெயரில் திமுக முதல் குடும்பத்திற்கு சென்று இருக்கிறது என்கிற குற்றசாட்டு அரசியல் வட்டாரத்தில் இருந்து வருகிறது. மேலும் அந்த பார்ட்டி பண்ட் என வசூலிக்கும் பணம் முதல் குடும்பத்தினர் வெளிநாடுகளில் முதலீடு செய்துள்ளதாகவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தவெக ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்தில் கடந்த திமுக ஆட்சியில் பார்ட்டி பண்ட் என்கிற பெயரில் எவ்வளவு மோசடி நடந்துள்ளது என்கிற மொத்த டேட்டாவும் முதல்வர் கையுக்கு சென்றுள்ளதாகவும், இதில் அதிக அளவும் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நண்பர் ரத்தீஷ் பெயர் அடிபடுவதாகவும் கூறப்படுகிறது. இப்படி மொத்த டேட்டாவும் கையில் வைத்து கொண்டு முதல்வர் சட்டசபையில், அது என்னப்பா பார்ட்டி பண்ட் என கேட்டதாகவும், இதை சுதாரித்து கொண்ட திமுக அடுத்து முதல்வர் விஜயை பேசவே விடாதபடி கூச்சலிட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
இதுமட்டுமில்லாமல் கடந்தகால ஆட்சியில் அமைச்சர்களுக்கு பி ஏ வாக இருந்தவர்களின் சொத்துக்கள் மட்டுமே பல ஆயிரம் கோடி உள்ளது என்கிற தகவல் முதல்வர் விஜய் கவனத்துக்கு சென்று இருக்கிறது. இப்படி இருக்கையில் வாயை திறங்க சி எம் என கூச்சலிட்டு சட்டசபைக்கு வந்த திமுகவினர், இனி வாயை திறக்காதீங்க சி எம் என்று சொல்லு வகையில் அமைத்துள்ளது திமுகவை சட்டசபையில் முதல்வர் விஜய் பந்தாடிய விஷயம்.
நிலையில் தற்பொழுது சில நெடுசாலை துறையின் காண்ட்ராக இந்த தவெக அரசு நிறுத்தி வைத்து இருப்பதாகவும், இதற்கு முக்கிய காரணம் அடுத்து மீண்டும் தாங்கள் தான் ஆட்சிக்கு வர இருக்கிறோம் என நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பு, தேர்தல் செலவுக்காக திமுக தரப்பில் பல கோடி வாங்கியதாக கூறப்படுகிறது,இதனாலே பல காண்ட்ராக்ட் தற்போதைய அரசு நிறுத்த காரணம் என கூறப்படுகிறது.
மேலும் கடந்த ஆட்சி காலத்தில் கனிம வளதுறை மூலமாக மட்டுமே சுமார் 5 ஆயிரம் கோடி வரை முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு எழுந்து இவர்கிறது. இதுமட்டுமன்றி முன்னாள் திமுக அமைச்சர் கே என் நேரு மீது உள்ள அமலாக்க துறை சோதனை, போன்றவற்றை தோண்டி எடுத்தாலே இந்த குற்றசாட்டுகள் அனைத்தும் திமுக முதல் குடுமபத்தை நோக்கி தான் செல்லும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
அந்த வகையில் இனி அடுத்தடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு துறை மூலமாக கடந்த கால திமுக ஆட்சியில் நடந்த ஊழல் குற்றசாட்டுகள் தொடர்பாக ஆதாரங்கள் திரட்டப்பட்டு வழக்கு பதிவு செய்ய முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், அதன்படி முதல் குடும்பத்தை மொத்தமாக தூக்க பக்கவா முதல்வர் விஜய் காய்களை நகர்த்தி வருகிறார் என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

