சாலை போடாமலே போட்டதாக கொள்ளை… வசமாக சிக்கிய ஏ வ வேலு…. தட்டி தூக்க சொன்ன CM விஜய்…

0
Follow on Google News

கடந்த 2022-ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்காமலேயே, ஒப்பந்ததாரருக்கு பல கோடி ரூபாய் வழங்கப்பட்டதாக, அறப்போர் இயக்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் வேலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அறப்போர் இயக்கம் அளித்த புகாரில், கரூர் மாவட்டத்தில் சாலை அமைக்கப்படாமலேயே ரூ. 7 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணிக்கு டெண்டர் சங்கரானந்த் இன்ஃப்ரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. அதன்படி, முன்பணமாக ரூ. 3.23 கோடி ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு, கரூர் பகுதியில் மொத்தம் 4 சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக கணக்கு காட்டி, ரூ. 4.19 கோடி வழங்கப்பட்டுள்ளது.

இந்த முறைக்கேட்டை முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் புகார் அளிக்கவே, சத்தியபாமா, ஆர். கண்ணன், பூபாலன் சிங் மற்றும் கே. பெரியசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டன. இதையடுத்து இந்த முறைக்கேடு தொடர்பான மற்ற அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதற்குள் இரவோடு இரவாக அந்த பகுதிகளில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாத வகையில் இந்த பணிகள் நடைபெற்றதாக கரூர் போலீஸ் தரப்பில் காரணம் சொல்லப்பட்டது. இதுமட்டுமல்லாமல், ஈரோட்டிலும் இதேபோன்று சாலைகள் அமைக்கப்படாமலேயே ரூ. 1.5 கோடி மதிப்பிலான ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் சாலைப் பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படாமலேயே ரூ. 25 கோடி ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்று அறப்போர் இயக்கம் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் பல இடங்களில் சாலைகளை முழுமையாகப் போடாமலேயே, போட்டதாகக் கணக்குக் காட்டிப் பல கோடி ரூபாய் மக்கள் பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதும், தரமற்ற சாலைகள் அமைப்பது ஒருபுறம் இருந்தாலும், வெறும் காகிதத்தில் மட்டுமே சாலைகளை அமைத்துவிட்டு நிதி முழுவதையும் ஒப்பந்ததாரர்களும் அதிகாரிகளும் பகிர்ந்து கொடுக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டதை தற்பொழுது ஆட்சிக்கு வந்திருக்கும் தவெக அரசு கண்டு பிடித்து இருக்கிறது.

இந்நிலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 35 பேர் கொண்ட குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர் சென்னையில் உள்ள அவரது இல்லம் உட்பட மொத்தம் 13 முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்றது. கரூர் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ‘அறப்போர் இயக்கம்’ அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து, பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில், 4 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பில் 4 சாலைகளை மேம்படுத்துவதற்கான பணிகளை தொடங்காத நிலையிலேயே, ஒப்பந்ததாரருக்கு 3 கோடியே 23 லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டு முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறையில் முன்பு கரூரில் பணியாற்றி தற்போது, மதுரை மண்டல உதவிப் பொறியாளராக இருக்கும் கண்ணன், நெடுஞ்சாலைத் துறையில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற உதவிப் பெறியாளர்கள் மற்றும் பணியிட மாறுதல் பெற்ற உதவிப் பொறியாளர்கள் 8 பேர், கரூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்த நிறுவனமான சங்கரானந்த் இன்ஃப்ரா ஆகிய 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது லஞ்ச ஒழிப்பு துறை செய்துள்ள இந்த வழக்கின் அடிப்படையில் யாரும் தப்பி விடாமல் தட்டி தூக்க சொல்லி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here