சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் விஜய் ஒரு குட்டி கதை சொல்கிறேன் என்கின்ற பெயரில் அப்பாவை காணோம் என்று சொன்ன அந்த குட்டி ஸ்டோரி முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு ஏற்பட்ட உச்சகட்ட அவமானமாக திமுக கட்சியினர் கருதுகிறார்கள். இதில் குறிப்பாக தன்னுடைய கணவருக்கு நேர்ந்த இந்த அவமானத்திற்கு தக்க பதிலடி கொடுத்து தீருவேன் என துர்கா ஸ்டாலின் சபதம் எடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் ஸ்டாலின் வீட்டுக்குச் செல்லும் திமுக மூத்த தலைவர்களிடம் தன்னுடைய ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் துர்கா ஸ்டாலின், என்ன செய்வீர்களோ தெரியாது என் கணவர் மீண்டும் சட்டசபைக்கு செல்ல வேண்டும் என்று தெரிவித்து வருகிறாராம். இந்த நிலையில் விஜய் சட்டசபையில் சொன்ன அப்பாவின் குட்டி கதை வரை , இடைத்தேர்தலில் மு க ஸ்டாலினை நிக்க வைப்பதற்காக எந்த ஒரு ஐடியாவும் ஸ்டாலின் குடும்பத்தினரிடம் இல்லையாம்.

ஆனால் முதல்வர் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரியால் தன் கணவருக்கு நேர்ந்த இந்த அவமானத்திற்கு பின்பு தன்னுடைய கணவரை இடைத்தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெறச் செய்து சட்டசபைக்குள் அனுப்பி முதல்லவர் விஜய்க்கு தன்னுடைய கணவரின் பவர் என்ன என்பதை காண்பிப்பேன் என்று நேரடியாகவே துர்கா ஸ்டாலின் களம் இறங்கி இருக்கிறாராம்.
அந்த வகையில் கடந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதி நன்றாக இருக்கிறது என்று சேகர் பாபு பேச்சை கேட்டு கணவரை இறக்கி தோல்வியை தழுவியது போல் இல்லாமல் , நேரடியாக ஒவ்வொரு தொகுதியாக ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார் துர்கா ஸ்டாலின், அந்த வகையில் திருச்சி கிழக்கு தொகுதியில் கணவர் ஸ்டாலினை போட்டியிட செய்யலாமா என்கின்ற ஆய்வில்,
அவர் அப்படி போட்டியிட்டால் மீண்டும் தோல்வியைத் தான் தழுவுவார் இங்கே தவெக நிச்சயம் வெற்றி பெறும் என்று ஆய்வு ரிப்போர்ட் சென்று இருக்கிறது. அதேபோன்று அதிமுகவினர் ராஜினாமா செய்த தொகுதிகளிலும் ஆய்வு செய்ததில் அங்கே திமுகவிற்கு துளி அளவு கூட வெற்றி வாய்ப்பு இல்லை என்கின்ற ரிப்போர்ட்டே சென்று இருக்கிறது.
இந்த நிலையில் மீண்டும் இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியை தழுவினால் தற்போது ஏற்பட்ட அவமானத்தை விட அது இன்னும் படு கேவலமாகிவிடும், மேலும் அடுத்து ஸ்டாலினின் அரசியல் செல்வாக்கும் மிகப்பெரிய அளவில் சரிவை சந்தித்து விடும் என்பதால் உதயநிதி ஸ்டாலினுக்கு மீண்டும் தன்னுடைய தந்தையை இடைத்தேர்தலில் போட்டியிட வைப்பதில் விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
அதே நேரத்தில் தற்போது சட்டசபையில் உதயநிதி ஸ்டாலின் ஸ்கோர் செய்து வரும் நிலையில் தந்தை உள்ளே வந்து விட்டால் தாம் டம்மி ஆகிவிடுமோ என்கின்ற அச்சம் உதயநிதி ஸ்டாலினுக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு சூழலில் திருவாரூரில் திமுக எம்எல்ஏவான பூண்டி கலைவாணரை ராஜினாமா செய்ய வைத்து அங்கே இடைத்தேர்தலில் ஸ்டாலினை போட்டியிடச் செய்து வெற்றி பெற வைத்து விட வேண்டும் என்று துர்கா ஸ்டாலின் மற்றும் ஸ்டாலின் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் குடும்பத்துடன் திருவாரூர் சென்ற ஸ்டாலின் குடும்பத்தினர் அங்கே கட்சி நிர்வாகிகளை சந்தித்தும் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் இடைதேர்தலில் கணவர் ஸ்டாலினை வெற்றி பெற வைத்து முதல்வர் விஜய் கண் முன்னே சட்டமன்றத்தில் என்னுடைய கணவரை அமர்த்துவேன் என துர்கா ஸ்டாலின் சபதம் நிறைவேறுமா என்பது திருவாரூர் தொகுதி மக்கள் கைவசம் தான் உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

