சமீபத்தில் முன்னாள் திமுக அமைச்சர் ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையால் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின் மூலம், முக்கிய ஆவணங்கள் மற்றும் ரொக்கமாக பணம் கைப்பற்றப்பட்டது, இந்நிலையில் சட்டசபையில் முதல்வர் விஜய்யை நோக்கி ஏ வ வேலு கேள்வி எழுப்பியதால் தான் அவருக்கு சொந்தமான இடங்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது என வெளியாகும் தகவல் உண்மையில்லை என்றும், ஏ வ வேலுவுக்கு முதல்வர் விஜய்க்கு வேறு ஒரு பஞ்சாயத்து இருக்கிறது என்கிற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.
திமுகவின் கஜானா என்று அழைக்கப்படக்கூடியவர் ஏ வ வேலு, திமுக முதல் குடும்பத்துடன் மிக நெருக்கமாமனவர், திமுக தேர்தல் செலவுகளுக்காக பெருமபாலான நிதி ஏ வ வேலுவிடம் இருந்து தான் வரும் என்றெல்லாம் கூறப்படுகிறது. இந்நிலையில் பணத்தால் எதையும் சாதிக்க முடியும் என்கிற திட்டத்துடன் த வெ க ஆட்சியை கவிழ்க்க ஏ வ வேலுவிடம் திமுக தலைமை ஒரு அசைமென்ட் கொடுத்து இருக்கிறது.

ஏ வ வேலுவும் அதற்கான வேலைகளை தொடங்கி இருக்கிறார். அதாவது த வெ க எம் எல் ஏக்கள் சுமார் 15 நபர்களை விலைக்கு வாங்கும் திட்டத்துடன் களம் இறங்கிய ஏ வ வேலு தரப்பினர், அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தியில் இருக்கும் எம் எல் ஏ க்கள், பொருளாதாரத்தில் பின்தங்கி இருக்கும் எம் எல் ஏக்கள். கட்சி தலைமையின் மீது அதிருப்தியில் இருக்கும் எம் எல் ஏக்கள் என தவெக எம் எல் ஏக்கள் பாட்டிலியிடப்பட்டு அவர்களை எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்யவைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறது ஏ வ வேலு தரப்பு.
அதற்கான பேச்சுவார்தையையும் த வெ க எம் எல் ஏ தரப்பிடம் நடத்தி இருக்கிறது ஏ வ வேலு தரப்பு என கூறப்படுகிறது. குறிப்பாக பெரும் தொகை கொடுக்கவும் முன் வந்து இருக்கிறது ஏ வ வேலு தரப்பு என கூறப்படுகிறது. இந்த தகவல் அமைச்சர் ஆதவா அர்ஜுனா கவனத்துக்கு செல்ல உடனே முதல்வர் விஜய்யிடம் பேசி இதற்கு முடிவு கட்ட வேண்டும் என அவசர அவசரமாக லஞ்ச ஒழிப்பு துறை மூலம் ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ள வைத்திருக்கிறது தவெக அரசு.
இந்நிலையில் தற்பொழுது ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் அவர் மீது F.I.R பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இனி இந்த எப் ஐ ஆர் அடிப்படையில் அமலாக்க துறை ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொண்டு, அவரை விசாரணைக்கு அழைக்கலாம், மேலும் வாய்ப்பு இருந்தால் சிறையில் கூட தூக்கி போடலாம்.
தபொழுது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை ஏ வ வேலு மீது எப் ஐ ஆர் பதிவு செய்திருப்பதன் மூலம், அவரை காப்பாற்றி கொள்ள ஓடி கொண்டிருக்கிறார் ஏ வ வேலு , இனி தவெக எம் எல் ஏ பக்கம் பேரம் பேச வரமாட்டார், அந்த வகையில் இனி நம் பக்கமே தலைவைத்து ஏ வ வேலு படுக்க கூடாது, மேலும் மற்ற திமுகவினர் யாராவது இதே வேலையை மீண்டும் செய்தால், அவர்களுக்கும் இது தான் என பாடம் புகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் ஏ வ வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு துறை சோதனை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தற்பொழுது தவெக தரப்பில் இருந்து அவர்களின் சட்டமன்ற உறுப்பினர்களை ரகசியமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், தவெக தரப்பு சட்டமன்ற இருப்பினர்கள் திமுக தரப்பில் இருந்து யாராவது தங்களிடம் பேசினால், அவர்களே தவெக தலைமைக்கு தெரிவித்து, தங்களுடைய நேர்மையை நிரூபித்து கொள்கிறார்களாம்.
இப்படியான ஒரு பரப்பரப்பான சூழலில் தற்போது தவெக எம் எல் ஏக்களை தூக்க வேண்டும், தவெக ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்கிற திட்டத்தை திமுக கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஏ வ வேலு மூலம் திமுக நடத்திய ஆபரேஷன் தோல்வியில் முடிந்து இருக்கிறது.

