மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதியில் மதுரை மத்திய தொகுதியில் மட்டும் தான் அணைத்து சமூக மக்களும் கலவையாக இருக்க கூடிய ஒரு தொகுதி, காஜிமார் தெரு, மகபூ பாளையம் ஆகிய பகுதி முழுவதும் இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக இருக்க கூடிய இடம், திடீர்நகர் பகுதியில் தலித் சமூக மக்கள் இருக்கும் பெரும்பான்மையாக இருக்கும் பகுதி, அதே போன்று முக்குலத்தோர் சமூகம், வெள்ளாளர் சமூகம் , யாதவ சமூகம், செட்டியார் சமூகம் என கணிசமாக அணைத்து சமூக மக்களும் இந்த தொகுதியில் இருந்து வருகிறார்கள்.
குறிப்பாக மதுரை மத்திய தொகுதியில் வடமாநிலத்தை சேர்ந்த சேட்டுகள் மதுரை மத்திய தொகுதியில் நிரந்தரமாக குடியேறி வாக்குரிமையும் அவர்களுக்கு உள்ளது. இதில் மதுரை மத்திய தொகுதியில் வெற்றி வாய்ப்பை நிர்ணயம் செய்யும் இடத்தில் இஸ்லாமிய வாக்குகளும், தலித் சமூக வாக்குகளும் முக்கிய பங்காற்றுகிறார், இதில் திடீர் நகர் பகுதியில் பெருபான்மையாக இருக்க கூடிய தலித் சமூக மக்கள் வசிக்கும் பகுதி வாக்குகள் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் விடுதலை சிறுத்தை கட்சி அங்கம் வகிக்கும் திமுக கூட்டணிக்கே வாக்களித்து வந்தனர்.

அதே போன்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு மதுரை மத்திய தொகுதியில் உள்ள இஸ்லாமிய மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்து வருகிறார்கள், குறிப்பாக மற்ற சமூகத்தை ஒப்பிடுகையில் மதுரை மத்திய தொகுதியில் வெள்ளாளர் மக்கள் கணிசமாக இருப்பதால் அதே வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த PTR பழனிவேல் தியாகராஜனுக்கு அந்த வாக்குகள் கிடைத்து வந்தது.
அந்த வகையில் இதுவரை வாக்குக்கு பணம் கொடுக்காமல் தொடர்ந்து இந்த தொகுதியில் இரண்டு முறை PTR வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம், அவர் சார்ந்த வெள்ளாளர் சமூகத்தின் வாக்கு மற்றும் இஸ்லாமியர்கள் வாக்குகள், தலித் சமூக வாக்குங்களை சிந்தாமல் சிதறாமல் PTR அறுவடை செய்து வந்ததின் காரணமாக நயா பைசா செலவு செய்யாமல் பெற்ற இதுவரை மதுரை மத்திய தொகுதியில் வெற்றி பெற்று வந்தார்.
ஆனால் தற்பொழுது வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த இயக்குனர் சுந்தர் சி இரட்டை இலை சின்னத்தில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார், அடுத்ததாக தமிழக வெற்றி கழகம் சார்பில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக மதுரை மத்திய தொகுதியில் களம் இறக்கி இருக்கிறார் தவெக தலைவர், அந்த வகையில் வெள்ளாளர் வாக்குகளை சுந்தர் சி பிரிக்க வாய்ப்புள்ளது என்று கணிக்கப்படுகிறது.
அதே போன்று இஸ்லாமிய வாக்குகளையும், தலித் சமூக வாக்குகளையும் தவெக வேட்பாளர் பிரிக்கும் பட்சத்தில் இந்த முறை அமைச்சர் PTR வெற்றி பெறுவது எளிதான காரியம் இல்லை என்றும், கடினமாக போராட வேண்டிய சூழலில் தற்பொழுது அமைச்சர் PTR இருக்கிறார் என்கிறது கள நிலவரம், மேலும் மதுரை மாநகராட்சி முறைகேடுகள் தொடர்பாக மதுரை மத்திய தொகுதி மக்கள் மத்தியில் திமுகவுக்கு எதிராக அதிருப்தி நிலவி வருவதை பார்க்கு முடிகிறது.
அதே நேரத்தில் இந்த தொகுதியில் அமைச்சர் PTR க்கு என்று தனி செல்வாக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது, மாநகராட்சி ஊழல் ஒருபக்கம் இருந்தாலும் அமைச்சர் PTR யை அந்த தொகுதி மக்கள் மிஸ்டர் கிளீனாக தான் பார்த்து வருகிறார்கள். இந்நிலையில் திமுக, அதிமுக , தவெக என மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் அடுத்தடுத்து வேட்பாளர்களின் பிரச்சாரத்தை பொறுத்து மக்கள் மனநிலை மாறும் சூழல் உருவாகுமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் PTR மூன்றாவது முறையாக வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிப்பாரா.? அல்லது இம்முறை தேர்தல் கள நிலவரம் மாறுமா என்பதை அடுத்தடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.

