கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக இருந்த நக்சல் பிரச்சினை, தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது மத்திய பாஜக அரசு.இந்தியாவுக்கு பாக்கிஸ்தான் போன்ற அந்நிய நட்டு அச்சுறுத்தல்மட்டுமல்லாமல், நாட்டின் உள்ளேயும் “0.5 முன்னணி” எனக் குறிப்பிடப்பட்ட நக்சல் இயக்கம் பல ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பு சவாலாக இருந்து வந்தது.
இந்த இயக்கத்தால் கடந்த காலங்களில் நாட்டின் பாதுகாப்பு படையினர், அரசியல் தலைவர்கள், சமூகப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், மத்திய பாஜக அரசு இந்த பிரச்சினையை எதிர்கொள்ள கடந்த சில ஆண்டுகளில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அரசியல் ரீதியாகவும் பெரிய விவாதம் உருவாகியுள்ளது.

கடந்த காங்கிரஸ் ஆட்சி காலங்களில், ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மென்மையான அணுகுமுறை பின்பற்றப்பட்டது மட்டுமின்றி , பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான நவீன தொழில்நுட்பம் மற்றும் நக்சல் இயக்கத்திற்கு எதிரான திட்டமிடல் என்பது போதிய அளவில் இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், “ரெட் காரிடார்” என்று அழைக்கப்பட்ட பகுதிகளில் சாலைகள், மின்சாரம், மருத்துவ வசதிகள் மற்றும் பள்ளிகள் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வளர்ச்சியின்றி இருந்தது, சில பழங்குடியினர் பகுதிகளில் மக்கள் வாக்களிக்க கூட முடியாத சூழ்நிலைகள் நிலவிய நிலையில், பிரதமராக மோடி பதவி ஏற்ற 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு மத்திய பாஜக அரசின் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டது.
பிரதமர் Narendra Modi தலைமையில் நாட்டிற்கு அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இயக்கத்துடன் பேச்சுவார்த்தை என்பதற்கு வாய்ப்பே இல்லை என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார் மோடி,அதேபோல், உள்துறை அமைச்சர் Amit Shah அறிமுகப்படுத்திய “SAMADHAN” திட்டத்தின் மூலம் பாதுகாப்புப் படைகளுக்கு ஒருங்கிணைந்த செயல் திட்டம் வழங்கப்பட்டது,
இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, CoBRA மற்றும் DRG போன்ற சிறப்பு கமாண்டோ படைகள் ட்ரோன்கள், நைட் விஷன் கருவிகள் மற்றும் பலப்படுத்தப்பட்ட முகாம்கள் போன்ற நவீன வசதிகளுடன் செயல்பட்டத்தின் விளைவாக, 2013ஆம் ஆண்டு 126 மாவட்டங்களில் தாக்கம் செலுத்தி வந்த நக்சல் நடவடிக்கைகள் தற்போது 10க்கும் குறைவான மாவட்டங்களுக்கு சுருங்கி விட்டது.
மேலும், மத்திய பாஜக அரசின் அதிரடி நடவடிக்கையின் மூலம் நக்சல் வன்முறை சம்பவங்கள் சுமார் 77 சதவீதம் வரை குறைந்துள்ளதுடன், உயிரிழப்புகள் 90 சதவீதம் வரை குறைந்துள்ளதா புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் IED வெடிகுண்டுகள் அதிகமாக இருந்த பகுதிகளில் தற்போது சாலைகள், மொபைல் கோபுரங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்கி வருகிறது மத்திய பாஜக அரசு.
நக்சல் நீதிமன்றங்கள்” இருந்த இடங்களில் தற்போது ஏக்லவ்யா மாதிரி பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், முன்பு வாக்குச்சாவடி கூட இல்லாத பல கிராமங்களில் தற்போது மக்கள் அதிகளவில் வாக்களித்து ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்று வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் Bharatiya Janata Party தலைமையிலான மத்திய அரசு, கடந்த 50 ஆண்டுகளில் தீர்க்க முடியாத பிரச்சினையை கடந்த 12 ஆண்டுகளில் பெருமளவில் கட்டுப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

