கடந்த 2021 சட்டசபை தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் தாமரையை மலர செய்த பாஜக, அதனை தொடர்ந்து கடந்த 2024 சட்டசபை தேர்தலில் தங்கள் தலையைமையில் கூட்டணி அமைத்து போட்டியிட்டு பாஜக மட்டும் 11 சதவிகித வாக்கு வங்கியை நிர்ணயம் செய்தது, இந்நிலையில் இந்த முறை சுமார் 27 தொகுதிகளில் களம் இறங்கும் பாஜக அதில் 5 தொகுதியில் திமுக அமைச்சர்களுக்கு எதிராகவும் 1 தொகுதி சபாநாயர் அப்பாவுக்கு எதிராகவும் நேரடியாக பாஜக களம் இறங்க இருக்கிறது.
குறிப்பாக திமுக அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகிய அசூர பலம் படைத்த ஆறு தொகுதியில் நேருக்கு நேராக பாஜக திமுகவை எதிர் கொள்ள இருக்கும் பாஜகவுக்கு இருக்கும் துணிச்சல் மற்ற கட்சிகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது, அந்த வகையில் பாஜக போட்டியிடும் ராதாபுரம் தொகுதி தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு போட்டியிட்டு வெற்றி பெற்று வரும் தொகுதி. இந்த தொகுதியில் சுமார் நான்கு முறை வெற்றி போற்று இருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

அடுத்ததாக சிவங்கங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் தொடர்ந்து 20 வருடடமாக நான்கு முறை வெற்றி பெற்று வரும் அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக போட்டியிட இருக்கிறது இம்முறை பாஜக, அடுத்தாக பாஜக போட்டியிட இருக்கும் திருச்செந்துர் தொகுதியில் தொடர்ந்து 6 முறை வெற்றி பெற்று 25 வருடமாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அனிதா ராதாகிருஷ்னனை எதிர்த்து பாஜக போட்டியிட இருக்கிறது.
அடுத்ததாக பாஜக போட்டியிட இருக்கும் திருவண்ணாமலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஏ வ வேலு, தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்று 15 வருடமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார், இந்த தொகுதியில் காங்கிரஸ் – திமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே இந்த தொகுதி உருவான காலத்தில் இருந்து வெற்றி பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது, அப்படி ஒரு தொகுதியில் இம்முறை திமுகவை வீழ்த்தி தாமரையை மலர செய்ய இந்த தொகுதியை பாஜக பெற்றுள்ளது.
இதே போன்று அமைச்சர்கள் மதிவேந்தன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ராசிபுரம் தொகுதி, மற்றும் அமைச்சர் நாசர் இருக்கும் ஆவடி ஆகிய தொகுதி என மொத்தம் 5 அமைச்சர்கள் , 1 சபாநாயகர் இருக்கும் மொத்தம் 6 தொகுதியில் பாஜக நேரடியாக , நேருக்கு நேராக போட்டியிட இருக்கிறது. அதுமட்டுமின்றி சிங்கத்தின் கோட்டைக்குள்ளே சென்று கர்ஜிக்கும் வகையில் திமுகவின் முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதி சொந்த ஊரான தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிட இருக்கிறது.
கடந்த 30 வருடமாக திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் திருவாரூர் தொகுதியில் பாஜக நேரடியாக போட்டியிட இருப்பது, மேலும் இந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்று விட்டால் தமிழக அரசியலில் பாஜகவுக்கு என ஒரு தனி இடம் வரலாற்றில் உண்டு என்பதை மறுக்க முடியாது, ஆகையால் மேற்கொண்ட திமுக ஆளுமைகள் போட்டியிடும் தொகுதிகளில் பாஜக போட்டியிட இருப்பது அந்த தொகுதி பாஜக நிர்வாகிகள் மத்தியில் புதிய உத்வேகத்தை கொடுக்கும் என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.
சுமார் 27 தொகுதிகளில் போட்டியிட இருக்கும் பாஜக இம்முறை இரட்டை இலக்கில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர்கள் இருப்பார்கள் என்கிற பெரும் நம்பிக்கையில் இருக்கும் பாஜக தலைமை, தேர்தலுக்கான வியூகத்தை விரிவு படுத்தி வருகிறது, குறிப்பாக சாதாரண தொகுதியில் வெற்றி பெறுவதை விட ஒரு அமைச்சர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெரும் பொழுது சுமை அந்த தொகுதியை சுற்றி உள்ள மற்ற தொகுதியிலும் இதன் தாக்கம் இருக்கும், ஆகையால் சவால் மிக்க தொகுதியில் பாஜக வெற்றி பெரும் பொழுது தான், அசூர் பலம் அடையும் என்கிற கணக்கில் 5 அமைச்சர்கள் தொகுதி, 1 சபாநாயகர் தொகுதி மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி சொந்த தொகுதியான திருவாரூர் ஆகிய தொகுதியில் பாஜக போட்டியிட இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

