மும்முனை போட்டியில் திருமங்கலம்… கரை சேருவாரா ஆர் பி உதயகுமார்… இதோ திருமங்கலம் கள நிலவரம்…

0
Follow on Google News

மதுரை திருமங்கலம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் இம்முறை மீண்டும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிப்பாரா என்கிற பரபரப்புக்கு மத்தியில் மதுரை திருமங்கலம் தொகுதியின் களம் நிலவரம் என்ன என்பது குறித்து நமது தினசேவல் குழுவினர் நடத்திய கள ஆய்வு ரிப்போர்ட் இறுதி செய்யப்பட்டுள்ளது, அதில் முழு விவரம் இதோ.

திருமங்கலம் பார்முலா என்கிற ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறையை தமிழகத்தில் முதல் முதலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மகன் முக அழகிரியால் அறிமுகம் செய்யப்பட்ட தொகுதி தான் திருமங்கலம், 2009 இடைதேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்ற திமுக, அதன் பின்பு இந்த தொகுதி மக்களை காசுக்கு பணம் வாங்கி ஓட்டுப்போடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில் இந்த தொகுதியில் வாக்குக்கு பணம் கொடுக்காமல் காரியம் சாதிக்க முடியாது என்பதை சில இடங்களில் பார்க்க முடிகிறது, குறிப்பாக எப்போது பணம் வரும் , திமுக எவ்வளவு கொடுக்கிறார்கள், அதிமுக எவ்வளவு கொடுக்கிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில் திருமங்கலம் தொகுதியில் உள்ள குறிப்பிட்ட சில பகுதி மக்கள் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில், அதிமுக – திமுக இரண்டு தரப்பு வேட்பாளரும் வலுவான வேட்பாளராக இருக்கிறார்கள், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார், திமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா மகன் சேடப்பட்டி மணிமாறன் ஆகியோர் போட்டியிடுகிறார்கள், இரண்டும் தரப்புமே வைட்டமின் பா வை அள்ளி இறைக்க தயாராக இருக்கிறார்கள்.

இதற்கு இடையில் ரீல் ஸ் மூலம் பிரபலமாக அறியப்பட்ட அமமுக வில் இருந்து விலகி சசிகலா உடன் இணைந்துள்ள ஜீவிதா நாச்சியார் இறங்கியுள்ளார், இதில் ஜீவிதா நாச்சியார் களம் இறங்கியுள்ளது அதிமுக எம் எல் ஏ ஆர் பி உதய்குமாருக்கு சேதாரத்தை ஏற்படுத்தும் விதமாக பார்க்க படுகிறது, மேலும் திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது மற்றும் ஓபிஎஸ் தரப்பு திமுகவில் இணைந்துள்ளது திமுக வேட்பாளர் மணிமாறன் இந்த வெற்றி பெற்று விடுவோம் என்கிற நம்பிக்கையில் இருப்பதாக பார்க்க படுகிறது.

ஆர் பி உதயகுமார் இந்த தொகுதியில் ஒரு சாமானியன் போல மக்கள் மத்தியில் அறியப்பட்டு வருகின்றவர், குறிப்பாக இந்த தொகுதியில் மகளிர் வாக்குகளை மிக பெரிய அளவில் அறுவடை செய்யக்கூடியவர் ஆர் பி உதயகுமார், ஆனால் அதற்கெல்லாம் இந்த முறை வாய்ப்பு கொடுக்க கூடாது என கடந்த 6 மாதங்களுக்கு முன்பே , திருமங்கலம் தொகுதி முழுவதும் உள்ள பெண்களுக்கு அண்டா , குண்டா என பரிசு பொருட்களை அள்ளி கொடுத்து மகளிர் வாக்குகளை சரி செய்து வைத்திருக்கிறார் திமுக வேட்ப்பாளர் மணிமாறன்.

இது ஒருபக்கம் இருக்க பத்து பைசா செலவு செய்யாமல், ரீல்ஸ் மட்டுமே போட்டே தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை திருமங்கலம் தொகுதிக்குள் வைத்திருக்கும் ஜீவிதா நாச்சியார் வாக்கு கேட்டு செல்லும் பகுதியில் செல்பி எடுக்க பெண்கள் ஆர்வத்துடன் இருப்பதை பார்க்க முடிகிறது, ஆனால் இதெல்லாம் வாக்குகளாக மாறுமா என்பது மிக பெரிய கேள்வி குறியாக உள்ளது.

ஆனால் ஜீவிதா நாச்சியார் ஆயிரம் வாக்குகள் வாங்கினாலும், 10 ஆயிரம் வாக்குகள் வாங்கினாலும் அது பெரும்பலும் ஆர் பி உதய்குமாருக்கு விழ வேண்டிய வாக்குகள் தான் என்பதை பார்க்க முடிகிறது, அந்த வகையில் திருமங்கலம் சட்டசபை தொகுதியில் கடும் போட்டிகளுக்கு மத்தியில் ஆர் பி உதயகுமார் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.