திருப்பரங்குன்றம் தேர்தல் கள நிலவரம்… திமுகவின் முதல் பெண் வேட்பாளார்… கடும் போட்டியாளராக உருவெடுத்த கீர்த்திகா தங்க பாண்டியன்…

0
Follow on Google News

மதுரையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பில் சீட்டிங் எம் எல் ஏ ராஜன் செல்லப்பா மீண்டும் போட்டியிடுகிறார், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் மதுரையில் உள்ள பத்து தொகுதியில் அதிமுக வெற்றி பெற்ற 5 தொகுதிகளில் , மேலூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இரண்டு தொகுதிகளில் தான் அதிமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற தொகுதி.

இதற்கு முக்கிய காரணம், கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது இந்த இரண்டு தொகுதிகளும் திமுக நேரடியாக போட்டியிடாமல் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது அதிமுகவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்பதற்கு காரணமாக அமைத்துள்ளது, அந்த வகையில் கடந்த 2021 ல் மேலூர் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இம்முறை மேலூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது, ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிடுகிறது, குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி திமுக நேரடியாக போட்டியிட இருக்கிறது, என்றதுமே,பழுத்த அரசியல்வாதி , எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்து வரக்கூடிய ராஜன் செல்லப்பாவை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட போவது யார் என்கிற எதிர்பார்ப்பு அந்த தொகுதி மக்கள் மத்தியில் இருந்தது.

அந்த வகையில் கடந்த 5 வருடமாக திருப்பரங்குன்றம் தொகுதியை குறிவைத்து பல நலத்திட்ட பணிகளை திமுக சார்பில் முன்னின்று செய்து வந்த கிருத்திகா தங்கபாண்டியன், அந்த தொகுதி மக்கள் மத்தியில், குறிப்பாக மகளிர் மத்தியில் நன்கு பரிச்சயமானவராக திகழ்ந்து வருகிறார், இதனை தொடர்ந்து திமுக சார்பில் கிருத்திகா தங்கபாடியன் வேட்பாளராக அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில் எதிர்பார்த்தது போன்றே கீர்த்திகா தங்கபாண்டியன் திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார்.

குறிப்பாக திருப்பரங்குன்றம் தொகுதி வரலாற்றில் , திமுக சார்பில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் இவர் வெற்றி பெற்றால், திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற முதல் சட்டமன்ற உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது, இந்நிலையில் தற்போதைய திருப்பரங்குன்றம் தேர்தல் கள நிலவரம் இரு முனை போட்டியாகவே இருக்கிறது,

தமிழக வெற்றி கழகம் சார்பில் சி டி ஆர் நிர்மல் குமார் இந்த தொகுதியில் போட்டியிடுகிறார், திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மத்தியில் பரிச்சயம் இல்லாத நபர் என்பதால் வேட்பாளருக்கென தனி செல்வாக்கு இந்த தொகுதியில் நிர்மல் குமாருக்கு இல்லை, இருந்தாலும் விசில் சின்னம், விஜய் என தவெக கணிசமான வாக்குகளை பெரும் என்பதை அந்த தொகுதியில் பார்க்க முடிகிறது.

அந்த வகையில் நேரடியாக திமுக போட்டியிட இருப்பது அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு மிக பெரிய சவாலாக அமைந்துள்ளதை பார்க்க முடிகிறது, குறிப்பாக இந்த தொகுதியில் தொடர்ந்து கட்சி பாகுபாடின்றி பெண்களை குறிவைத்து நலத்திட்டம் பணிகளையும், பரிசு பொருட்களையும் கடந்த 5 ஆண்டுகளாக வாரி வழங்கி வந்த கீர்த்திகா தங்கபாடியனுக்கு திருப்பரங்குன்றம் தொகுதி மகளிர் வாக்குகளை மிக பெரிய பலமாக இருப்பதை பார்க்க முடிகிறது.

அதிமுக வேட்பாளர் ராஜன் செல்லப்பாவுக்கு கடுமையான போட்டியாளராக உருவெடுத்து இருக்கிற கீர்த்திகா தங்கபாண்டியன், அடுத்தடுத்து அதிமுக – திமுக இரண்டு தரப்பினர் மேற்கொள்ள இருக்கும் தேர்தல் பிரச்சாரத்தை பொறுத்து மக்கள் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அடுத்தடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.