இன்னும் சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், யார் யார் எந்த பக்கம் செல்ல இருக்கிறார் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது. குறிப்பாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோர் நிலைப்பாடு என்ன என்கிற பரபரப்பு எழுந்துள்ளது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த ஓபிஎஸ் அடுத்து தமிழக முதலவரை சந்தித்தது தமிழக அரசியலில் மிக பெரிய விவாத பொருளாக மாறியது.
அந்த வகையில் திமுக உடன் நெருங்கிய தொடர்பில் ஓ பன்னீர் செல்வம் இருந்து வருகிறார் என்கிற தகவலும் வெளியானது, மேலும் திமுகவில் ஓபிஎஸ் இணைந்தால் துணை பொதுச் செயலாளர் பதவியை முதல்வர் முக ஸ்டாலின் தருவதற்கு தயாராக இருப்பதாகவும், இருந்தாலும் ஓபிஎஸ் கால அவகாசம் கேட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் , இல்லை என்றால் டிசம்பர் 15க்கு பிறகு எங்களுடைய நடவடிக்கை வேறு மாதிரி இருக்கும் என எடப்பாடி பழனிசாமிக்கு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்து இருந்தார் பன்னீர் செல்வம், மேலும் சமீபத்தில் ஓ பன்னீர் செல்வம் அவருடைய ஆதரவாளர்களுடன் நடத்திய கூட்டத்தில், அடுத்து திமுக பக்கம் செல்வதா, அல்லது தமிழக வெற்றி கழகம் பக்கம் செல்வதா என்கிற கருத்துக்கள் கேட்கப்ட்டதாக கூறப்படுகிறது.
இதில் பெரும்பாலனவர்கள் விஜய் பக்கம் செல்லவே விருப்பம் தெரிவித்ததாகவும், ஒரு சிலர் திமுக பக்கம் செல்ல வேண்டும் என விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் டிசம்பர் 15 தேதிக்குள் மட்டுமில்லை இனி எப்போது அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி முன் வரமாட்டார் என்பதை நன்கு உணர்ந்த ஓ பி எஸ், தனி கட்சி தொடங்குவதற்கான ஏற்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறார்.
தனி கட்சிக்கான கோடி மற்ற அணைத்து வேலைகளிலும் தீவிரமாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், தனி கட்சி தொடங்குவது குறித்து டிசம்பர் 15 தேதிக்கு பின் அறிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது. அதே நேரத்தில் தென் மாவட்டத்தில் பெரும்பான்மையாக உள்ள முக்குலத்தோர் சமூகத்தின் வாக்குகளை முழுமையாக பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் முக ஸ்டாலின்.
ஓபிஎஸ் ஸை திமுகவில் இணைந்து விட்டால், தென் மாவட்டத்தில் கூடுதல் பலமாக இருக்கும் என , தொடர்ந்து திமுகவில் இணைய ஓபிஎஸ் உடன் பேச்சுவார்த்தை திமுக தரப்பில் நடந்து வருகிறது, அதே போன்று விஜய் உடனும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் திமுக பக்கம் செல்வதா அல்லது விஜய் பக்கம் செல்வதா என்பதில், விஜய் பக்கம் ஓபிஎஸ் செல்லவே அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனியாக கட்சி தொடங்கி விஜய் உடன் கூட்டணிக்கு செல்லவே ஓபிஎஸ் அதிக வாய்ப்பு உள்ளது என்றும், மேலும் தொடர்ந்து அதிமுக தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், தனியாக கட்சி தொடங்கி அதிமுகவை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட திட்டமிட்டுள்ள ஓபிஎஸ், டிசம்பர் 15க்கு பிறகு என்ன செய்ய போகிறார் என்கிற பரபரப்பு நீடித்து வருகிறது.
அதே நேரத்தில் செங்கோட்டையன், டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆகியோர் ஒரே அணியில் இருக்க அதிக வாய்ப்புள்ளது என்றும், அதனால், விஜய் கட்சியில் இணையும் செங்கோட்டையனை தொடர்ந்து தமிழக வெற்றி கழக கூட்டணியில் தான் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளது என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

