செங்கோட்டையன் போட்ட நான்கு கண்டிஷன்… ஆடி போன விஜய்… இறுதியில் ஓகே சொல்லி சரண்டரான விஜய்…

0
Follow on Google News

த.வெ.க. வில் சமீபத்தில் இணைந்த மூத்த அரசியல் தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன், அக்கட்சியில் இணைவதர்க்கு முன்பு நான்கு முக்கிய கண்டிசன்களை விஜய்யிடம் நேரடியாகவே வைத்த தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது. செங்கோட்டையன் த.வெ.க. வில் இணைய இருக்கிறார் என்றதும் முதல்வர் முக ஸ்டாலின் எபப்டியாவது செங்கோட்டையனை திமுக பக்கம் இழுத்து வந்து விட வேண்டும் என கடைசி நிமிடம் வரை முயற்ச்சி செய்து வந்தார்.

ஆனால் திமுகவை இரண்டாவது சாய்ஸ் சாக வைத்துக்கொண்ட செங்கோட்டையன், முதல் விருப்பமாக தொடர்ந்து த.வெ.க. வில் பேசி வந்துள்ளார். குறிப்பாக த.வெ.க. வில் இருந்து புஸ்ஸி ஆனந்த் , ஆதவா அர்ஜுனா ஆகியோர் தொடர்ந்து த.வெ.க. வில் இருந்து பேசி வந்த நிலையில் , செங்கோட்டையன் தனக்கு த.வெ.க. வில் இணைய விருப்பம் தான், அதற்கு முன்பு நான்கு கண்டிஷன்கள் உண்டு, அதற்கு ஓகே என்றால் நோ ப்ரப்ளேம் என்று தெரிவித்து இவர்கிறார்.

அதற்கு என்ன கண்டிஷன் சொல்லுங்க , தலைவரிடம் நாங்க கேட்டு சொல்கிறோம் என புஸ்ஸி மற்றும் ஆதவா அர்ஜுன் கேட்க, அதற்கு என்ன கண்டிஷன் என்பதை நேரடியாக விஜயிடம் நான் தெரிவித்து கொள்கிறேன், நாங்க இரண்டு பெரும் பேசி முடிவு செய்து கொள்கிறோம், இடையில் நீங்கள் தலையிட வேண்டாம், ஒன் டு ஒன் நானும் விஜய் மட்டும் பேச வேண்டும் என செங்கோட்டையன் நேரடியாக புஸ்ஸி மற்றும் ஆதவா அர்ஜுன் இருவரிடம் தெரிவித்து இருக்கிறார்.

இவர்கள் இந்த தகவலை விஜய்யிடம் தெரிவிக்க , உடனே செங்கோட்டையன் – விஜய் இருவரும் ஒன் டூ ஒன் சந்திப்பு நடந்து இருக்கிறது. சில நிமிடம் விஜய் உடன் சகஜமாக பேசிவிட்டு அதன் பின்பு செங்கோட்டையன் தன்னுடைய நான்கு கண்டிஷனை தெரிவித்து இருக்கிறார். அதில் முதல் கண்டிஷன் த.வெ.க. அரசியலில் கொங்கு மண்டலம் முழுவதும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

வரும் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வேட்பாளர் யார் என்பதை நான் தான் முடிவு செய்வேன், கூட்டணி கட்சிகளுக்கு கொங்கு மண்டலத்தில் எத்தனை தொகுதி, எந்தத்த தொகுதி என எல்லாமே நான் தான் முடிவு செய்வேன், கொங்கு மண்டலத்தில் த.வெ.க. வளர வேண்டும், கொங்கு மண்டலத்தில் த.வெ.க. வெற்றி பெற வேண்டும் என்றால் கொங்கு மண்டலம் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என தெரிவித்து இவர்கிறார் செங்கோட்டையன்.

இதற்கு விஜய் சற்று தயக்கத்துடன் கொங்கு மண்டலம் முழுவதையும் , உங்களின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கிறேன், கொங்கு மண்டலம் குறித்து நானே உங்களின் ஆலோசனை படி முடிவு செய்கிறேன் என விஜய் தெரிவித்து இருக்கிறார். அடுத்த கண்டிஷனாக, வரும் 2026 சட்டசபை தேர்தலில் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் தோல்வி அடைய செய்ய வேண்டும், அதற்கு தகுந்த வேட்பாளரை நான் தேர்வு செய்கிறேன், எனக்கு உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என விஜய்யிடம் செங்கோட்டையன் தெரிவிக்க அதற்கும் விஜய் ஓகே சொல்லியிருக்கிறார்.

அடுத்ததாக வரும் 2026 தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்றால் தனக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என செங்கோட்டையன் கேட்க சற்று ஆடி போன விஜய், ஒன்றுக்கு மேற்பட்ட துணைமுதல்வர்களில் நீங்களும் ஒருவராக இருந்துக்கோங்க என தெரிவித்து இருக்கிறார். அடுத்ததாக கொங்கு மண்டலத்தில் திமுக அமைச்சர் முத்துசாமியை தோல்வியடைய செய்யவேண்டும் என்கிற நான்கு கண்டிஷனுக்கு விஜய் ஓகே சொன்ன பின்பே த.வெ.க. வில் இணைந்து இருக்கிறார் செங்கோட்டையன் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கட்சியில் இணைந்த பின்பும் கூட என்ன நேரடியாக விஜய் தான் தொடர்பு கொள்ள வேண்டும், எனக்கு விஜய்க்கு இடையில் புஸ்ஸி ஆனந்த், ஆதவா அர்ஜுனா போன்றோரெல்லாம் தலையிட கூடாது என்பதில் ரெம்பவே ஸ்டிட்டா சொல்லிவிட்டாராம் செங்கோட்டையன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here