திட்டமிட்டு ஊடுருவியஇருவர்… பழனி 100 கோடி சொத்து விவகாரம்… தட்டி தூக்க சொன்ன CM விஜய்…

0
Follow on Google News

பழனி கோவிலுக்கு சொந்தமான 100 கோடி நில விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதற்கு பின்னனி குறித்து அடுத்தடுத்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகிறது, குறிப்பாக பழனி அடிவாரத்தில் உள்ள இந்த சர்ச்சைக்குரிய நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு நடந்ததுக்கு பின்பு எதிர்க்கட்சிகள் மொத்தமும் ஆளும் தவெக அரசை நோக்கி பழனிக்கு மொட்டையா என்று விமர்சித்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் தங்கள் பக்கம் எந்த ஒரு தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு தற்போது உள்ளது. சுமார் ஒரு ஏக்கர் 40 சென்ட் இடம் தற்பொழுது பழனி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக இலவச கார் பார்க்கிங் ஆக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த இலவச கார் பார்க்கிங்கில் ஒரு குறிப்பிட்ட நபர் அந்த இடத்தின் உரிமையாளராக மாறும்பொழுது,

அதை கட்டண பார்க்கிங்காக மாற்றினாள் மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பாதிக்கலாம், அதற்காக திட்டமிட்டு இந்த இடம் மாற்றப்பட்டு இருக்கிறது என்கின்ற தகவலும் வெளியாகிறது, அதாவது அந்த இடத்துக்கு சொந்தமான மடத்திற்குள் இரண்டு நபர்கள் ஊடுருவுகிறார்கள், முக்கிய பதவியில் உள்ள அந்த இரண்டு நபர்கள் நம்மளுடைய மடத்திற்கு எந்த ஒரு வருமானமும் இல்லை,

அதனால் யார் அதிக விலைக்கு இந்த இடத்தை கேட்கிறார்களோ, அவர்களுக்கு இந்த இடத்தை விற்பனை செய்து விடலாம் என்று திட்டமிடுகிறார்கள். ஆனால் பழனி கோவிலின் இ ஓ மாரிமுத்து தான் அந்த இடத்திற்கும் தற்காராக உள்ளார். அவர் தொடர்ந்து இந்த இடம் கடந்த ஒரு வருடமாக பத்திரபதிவு செய்வதற்கான முயற்சிக்கு தடையாக இருக்கிறார்.

இந்த நிலையில் , அந்த இடம் பத்திரப்பதிவு செய்வதற்காக தடையாக இருக்கும் மாரிமுத்து திடீரென்று டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார், ஜூன் 6ஆம் தேதி அந்த 100 கோடி ரூபா மதிப்புடைய பழனி கோவிலுக்கு சொந்தமான சொத்து பத்திரப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆனால் பத்திரப்பதிவு நடக்கும் என்று அந்த பத்திரப்பதிவு துறையில் இருக்கும் அதிகாரிகள் விடுமுறையில் அனுப்பப்பட்டு,

அருகில் இருக்கும் எத்தனையோ பத்திரப்பதிவு அதிகாரிகள் இருக்கையில் கொடைக்கானலில் இருந்து ஜஸ்டிஸ் மணிகண்டன் என்பவர் வரவழைத்து இந்த 100 கோடி ரூபா சொத்து பத்திரப்பதிவு செய்யப்படுகிறது, அந்த வகையில் இது சாதாரணமாக கடந்து போக கூடிய செயல் அல்ல, ஒரு வருடங்களாக இந்த இடம் முறைகேடாக பத்திர பதிவு செய்வதற்கு தடையாக இருக்கும் அதிகாரி அங்கிருந்து மாற்றப்படுகிறார்.

மேலும் சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் வேலை செய்யும் அதிகாரிகள் விடுப்பில் செல்கிறார்கள், கொடைக்கானலில் இருக்கும் ஜஸ்டிஸ் மணிகண்டன் வரவழைத்து இந்த பத்திரம் பதியப்படுகிறது. அப்படியானால் இதற்கு பின்பு மிகப் பெரும் புல்லிகளின் தலையீடு இல்லாமல் இவ்வளவு பெரிய முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை என்பதுதான் எந்தவித சந்தேகமின்றி மக்கள் எழுப்பும் கேள்வி.

அந்த வகையில் இந்த பெரிய முறைகேடு பின்னணியில் இருக்கும் யார் அந்த சார் என்பதை முதல்வர் விஜய் கண்டறிந்து உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தூய சக்தி என்று நம்பிக் விஜய்க்கு வாக்களித்த மக்களின் எண்ணமும் கூட அந்த எண்ணத்தை முதல்வர் நிறைவேற்றும் வகையில் யாரும் இதில் தப்பித்து விட கூடாது , யாராக இருந்தாலும் தட்டி தூக்குக என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here