₹257 கோடி முறைகேடு … அமலாக்கத்துறை கையில் வீடியோ ஆதாரம்… தப்பிக்க வழியின்றி தவிக்கும் கருணாநிதி குடும்பம்…

0
Follow on Google News

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கூறி, துரை தயாநிதி உள்ளிட்டோர் மீது கடந்த 2012 அதிமுக ஆட்சி காலத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் விசாரணைக்கு துரை தயாநிதி ஆஜராகாத நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

இதையடுத்து, 2012-ம் ஆண்டிலேயே துரை தயாநிதி உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றார். அதேநேரத்தில், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. அதன்பிறகு… குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த கிரானைட் வழக்கில் காவல்துறை ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

அதில், சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததால் அரசுக்கு சுமார் 257 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதில் துரை தயாநிதி உள்ளிட்ட பலர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டனர்.ஆனால், இத்துடன் வழக்கு முடிந்துவிடவில்லை. அமலாக்கத்துறையும் வழக்கில் நுழைந்தது. கிரானைட் முறைகேடு வழக்கை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத்துறை அதாவது ED, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்தது.

சட்டவிரோதமாக கிரானைட் மூலம் பெறப்பட்டதாக கூறப்படும் பணம் மற்றும் சொத்துகள் தொடர்பாக பணமோசடி நடைபெற்றதா என்பதுதான் ED வழக்கின் முக்கிய அம்சமாக இருந்தது. இந்த வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.ஆனால், துரை தயாநிதியின் உடல்நிலை காரணமாக அவரால் நீதிமன்ற விசாரணையில் முறையாக கலந்துகொள்ள முடியவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் வழக்கின் விசாரணை தொடர்ந்து தாமதமானது. இந்த நிலையில்தான் சமீபத்தில் முக்கிய திருப்பம் ஏற்பட்டது. துரை தயாநிதி உடல்நிலை காரணமாக நீதிமன்ற விசாரணையில் ஆஜராக முடியவில்லை என்று கூறப்படும் நிலையில், அவர் IPL கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்ததாகவும், தேர்தலில் வாக்களிக்க சென்றதாகவும் ED தரப்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பான காட்சிகள் மற்றும் தகவல்களையும் ED சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, துரை தயாநிதியின் தற்போதைய உடல்நிலை குறித்து மீண்டும் மருத்துவ ரீதியாக பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாகத்தான் JIPMER மருத்துவப் பரிசோதனை உத்தரவு வந்துள்ளது.

துரை தயாநிதியின் உடல் மற்றும் மனநிலையை பரிசோதித்து, அவர் நீதிமன்ற விசாரணையை எதிர்கொள்ளும் நிலையில் இருக்கிறாரா என்பதை மருத்துவக் குழு மதிப்பீடு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக அவரை புதுச்சேரியில் உள்ள JIPMER மருத்துவமனைக்கு அனுப்பி மருத்துவப் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகுதான், அடுத்தகட்டமாக இந்த வழக்கில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெரியவரும்.ஆக, 2012-ல் தொடங்கிய கிரானைட் வழக்கு… பிடிவாரண்ட்… முன்ஜாமீன்… 257 கோடி ரூபாய் இழப்பு குற்றச்சாட்டு… அதன்பிறகு ED வழக்கு… உடல்நிலை காரணமாக விசாரணை தாமதம்… IPL போட்டி மற்றும் தேர்தலில் பங்கேற்றது தொடர்பாக ED எழுப்பிய கேள்விகள்… இறுதியாக JIPMER மருத்துவப் பரிசோதனை என, துரை தயாநிதி தொடர்பான இந்த வழக்கு தற்போது மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here