நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் விஜய் ஆட்சி அமைப்பதற்கு மெஜாரிட்டி இல்லை என்றதும் , முதல் நபராக முண்டியடித்து கொண்டு ஆதரவை கொடுத்தது காங்கிரஸ் கட்சி, அதாவது வேறு எதாவது கட்சி முன்கூட்டிய ஆதரவு கொடுத்து, காங்கிரஸ் கட்சி கடைசியாக ஆதரவு கொடுத்து, எங்கே அமைச்சரவையில் இடம் கிடைக்காமல் போய் விடுமோ என்கிற ஒரு வித பயத்தில் இரண்டு அமைச்சர் பதவிக்காக முதல் நபராக தவெக வில் துண்டை போட்ட கட்சி காங்கிரஸ் கட்சி.
அதே போன்று விஜய் என்கிற ஓடுற குதிரையில் சவாரி செய்து கொண்டு 2029 நாடளுமன்ற தேர்தலில் பிரதமராக அமர்ந்து விடலாம் என்கிற கனவில் விஜய் முதல்வராக பதவி ஏற்பு விழாவில் வந்து கலந்து கொண்டவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு தகுதி மீறி செய்தது போன்று அமைச்சரவையில் இடம் மற்றும் ஒரு ராஜசபை எம்பியும் கொடுத்தார் முதல்வர் விஜய்.

ஆனால் இந்த கூட்டணி அடுத்து நூறு நாட்கள் கூட நீடிக்கவில்லை என்று சொல்லும் வகையில், அடுத்த பிரதமர் விஜய் தான் என தவெக அமைச்சர்கள் பேச தவெக – காங்கிரஸ் கூட்டணிக்குள் புகைச்சல் உண்டானது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், தற்பொழுது தவெக ஆட்சியில் இருக்க முக்கிய காரணமே காங்கிரஸ் கட்சி தான் என்கிற தோரணையில் பேசியது தவெக வினரை கோபம் அடைய செய்தது.
மேலும் விஜய்யை அடுத்த பிரதமர் என்றெல்லாம் பேசுவதை சீரியசாக எடுத்துக்க கூடாது, என்னையும் தான் அடுத்த பிரதமர் என்று சொல்கிறார்கள் என்று மாணிக்கம் தாகூர் பேசியது நகைப்புக்குரியதாக இருந்தது, இந்நிலையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை தூக்கி சுமக்க தயாராக இல்லாத தவெக பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்ய முடிவு செய்துள்ள தகவல் டெல்லி காங்கிரஸ் தலைமையை கலக்கம் அடைய செய்துள்ளது.
ஏற்கனவே 10 வருடங்களாக கூட்டணியில் இருந்து திமுகவை விட்டு விலகி தவெக வில் வந்து இணைந்த காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனையா இது என, ஒரு வேலை அவசரப்பட்டுட்டு திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோமோ என்கிற குழப்பத்தில் இருக்கும் டெல்லி காங்கிரஸ் தலைமை , மீண்டும் திமுகவுக்கு தூது விடும் வேலையை செய்து இருக்கிறது, அதற்காக டெல்லியில் உள்ள சில முக்கிய காங்கிரஸ் புள்ளிகள் மூலம் கனிமொழியிடம் பேசி இருக்கிறது டெல்லி காங்கிரஸ் தலைமை.
இது குறித்து கனிமொழி முக ஸ்டாலின் கவனத்துக்கு எடுத்து செல்ல , அவர் சற்றும் யோசிக்காமல் திமுக கூட்டணியில் வெளியேறிய எந்த கட்சி மீண்டும் கூட்டணிக்குள் வந்தால் இணைத்து கொள்வோம், காங்கிரஸ் கட்சிக்கு இனி திமுக கூட்டணியில் இடமில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டாராம் திமுக தலைவர் முக ஸ்டாலின்.
இந்த தகவலை அப்படியே காங்கிரஸ் தலைமைக்கு கொண்டு சேர்த்து இருக்கிறார் திமுக எம்பி கனிமொழி. இருந்தும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 வருடம் இருக்கு அதற்குள் தவெக பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்று கொள்ள வில்லை என்றால், திமுகவுடன் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி எப்படியும் ஸ்டாலின் மனதை கரைத்து விடலாம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறதாம் டெல்லி காங்கிரஸ் தலைமை.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் இருக்கும் திமுக ஆதரவு தலைவர்களான பா சிதம்பரம், செல்வ பெருந்தகை போன்ற முக்கிய நபர்களிடம், திமுக உடன் நெருங்கிய தொடர்பிலே இருங்க , வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தவெக ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்று கொள்ளவில்லை என்றால், திமுக – காங்கிரஸ் கூட்டணியை நீங்கள் தான் ஏற்படுத்த வேண்டும் என பா சிதம்பரம், செல்வ பெருந்தகை போன்றவர்களுக்கு அசைன்மென்ட் கொடுத்துள்ளதாம் காங்கிரஸ் தலைமை.

