பாஜக – தனுஷ் கூட்டணி… எடப்பாடியை கை கழுவிய அமிதாஷா… தனுஷ் வீட்டில் ஒரு மணி நேர பேச்சுவார்த்தை…

0
Follow on Google News

சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி அனுமதி கேட்டும், அனுமதி கொடுக்கப்படவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க சென்ற போது, முகம் கொடுத்து கூட அவர்களிடம் அமித்ஷா பேசவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2026 சட்டசபை தேர்தல் என அதிமுக உடன் கூட்டணி அமைத்து தோல்வியை மட்டுமே சந்தித்து வந்த பாஜக, தற்பொழுது அழிவின் விளிம்பில் இருக்கும் அதிமுகவை கை கழுவ முடிவு செய்துள்ளது. இதன் பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமி மீது அமித்ஷாவுக்கு இருக்கும் கோபமும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் அமித்ஷா கொடுத்த அறிவுரை எதையுமே எடப்பாடி ஏற்று கொள்ளவில்லை, இதுவே தற்பொழுது அதிமுகவுக்கு மட்டுமில்லை அதிமுக உடன் கூட்டணி அமைத்த பாஜகவுக்கும் தோல்வியை பெற்று தந்துள்ளது. இந்த நிலையில் வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவை காட்டி விட்டுவிட்டு வேறு ஒரு கூட்டணியை அமைக்க முடிவு செய்துள்ளது பாஜக என்கிற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சமீபத்தில் போயஸ் கார்டனில் உள்ள தனுஷ் இல்லத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பிரசோபாத் குமார் சந்தித்து தனுஷிடம் ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தி இருக்கிறார். இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த ஆலோசனை தான் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. வரும் உள்ளாட்சி தேர்தலில் தனுஷ் உடன் கூட்டணி அமைத்து பாஜக தேர்தலை சந்திக்க இருப்பது குறித்த கூட்டணி பேச்சுவார்த்தை தான் இந்த சந்திப்பு என்கிற கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக ஏற்கனவே கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன்பு ரஜினியை வைத்து தமிழகத்தில் அரசியல் ஆட்டத்தை தொடங்கியது பாஜக, ரஜினிகாந்தும் ஆன்மீக அரசியல் என முழக்கமிட்டு தன்னுடைய அரசியல் அறிவிப்பை அறிவித்தார், ஆனால் அரசியல் அறிவிப்பு அறிவிப்பாகவே மட்டுமே இருந்தது, கட்சி தொடங்காமலே தன்னனுடைய உடல்நிலை சரியில்லை என அரசியலில் இருந்து ஜகா வாங்கினார் ரஜினிகாந்த்.

தற்பொழுது ரஜினிகாந்த் போன்று ஆன்மிக முழக்கத்துடன் ஓம் நமசிவாயா என தன்னுடைய அரசியல் அடியை தனுஷ் எடுத்து வைத்துள்ள நிலையில், தனுஷ் பின்னனியில் பாஜக இருக்கிறது என பரவலாக பேசப்பட்டு வந்தது, அதை நிரூபிக்கும் வகையில் சமீபத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மற்றும் தனுஷ் இருவருடைய சந்திப்பு தனுஷ் இல்லத்தில் நடந்துள்ளது.

அந்த அரசியல் அறிவிப்பை அறிவித்துள்ள தனுஷ் வரும் 2031 சட்டசபை தேர்தலை குறி வைத்து காய்களை நகர்த்தி வருவதாகவும், 2031 சட்டசபை தேர்தலில் விஜய் vs தனுஷ் என்கிற அரசியல் உருவெடுக்கும் வகையில் சட்டசபை சேர்தலுக்கு இரன்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தீவிர அரசியலை கையில் எடுக்க நடிகர் தனுஷ் திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான திரை மறைவு உதவியை பாஜக செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் பாஜக உடன் இணைந்து வரும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருக்கும் தனுஷ், அரசியல் ஆழம் என்ன என்பதும், தனக்கு எந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கு இருக்கு என்பதை அறிந்து கொள்வதற்காக வரும் உள்ளாட்சி தேர்தல் இருக்கும் என முடிவு செய்துள்ள தனுஷ், இதை ஒரு அரசியல் ஆரம்பத்திற்கான பரிசோதனையாகவே உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here