2029 கூட்டணி ஆட்சி… பிரதமராகும் விஜய்.. ஸ்கெட்ச் போட்டு வேலை செய்யும் ஜான் ஆரோக்கிய சாமி…

0
Follow on Google News

கடந்த 3 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியில் உள்ளது. ஆனால் பாஜகவின் எம்பிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்து கொண்டே தான் உள்ளது. கடந்த 2014 இந்தியா முழுவதும் வீசிய மோடி அலையில் முதல் முதலில் பிரதமராக பதவி ஏற்ற பிரதமர் மோடி, அடுத்து 2019ல் நடந்த தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.

ஆனால் 2024 நாடளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காமல் கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சியை நடத்தி வருகிறது.அந்த வகையில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் செல்வாக்கு இந்தியா அளவில் மிக பெரிய அளவில் சரிந்துள்ளதை பார்க்க முடிகிறது, இது வரும் 2029 தொடர்ந்தால் பாஜக 4 வது முறையாக ஆட்சியை பிடிப்பதில் மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும்.

இதை கருத்தில் கொண்டு தான் தமிழக முதல்வர் விஜய் இந்தியாவின் பிரதமர் நாற்காலியை நோக்கி நகர்த்த தொடங்கி இருக்கிறார், விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி, அதாவது காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமந்து பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்தி தேர்தலை சந்திப்பதை விட மோடியா .? தளபதியா.? என்று விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2029 தேர்தலை சந்திக்க இருக்கிறது தவெக.

அதன் வெளிப்பாடுகளின் ஓன்று தான், ஒரே நேரத்தில் தவெக அமைச்சர்கள் பலரும் அடுத்து பிரதமர் விஜய் என கருத்து தெரிவித்து வருவது, மற்றும் வட மாநிலங்களில் தமிழக முதல்வர் விஜய் குறித்த செய்திகள் மிக பெரிய அளவில் வைரலாகி வருவது இது அனைத்துமே அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியின் அரசியல் வியூகம் தான் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

வடமாநிலங்களில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு இல்லாமல் தவித்து கொண்டிருக்கிறது, ராகுல் காந்தியே வட மாநிலங்களில் எதாவது ஒரு தொகுதியில் துணிந்து நின்று வெற்றி பெற தைரியம் இல்லாமல் தான், தென் இந்தியாவில் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார். அந்த அளவுக்கு காங்கிரஸ் கட்சியில் தென் இந்தியா தவிர்த்து வேறு எங்குமே செல்வாக்கு இல்லை.

இப்படியான ஒரு சூழலில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென்மாநிலங்களை மட்டும் குறி வைத்து விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தால், தென் மாநிலங்களில் மட்டுமே சுமார் 75 தொகுதிகள் வரை தவெக வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது என்பதை விஜய்யின் அரசியல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கிய சாமி கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் காங்கிரஸ் கழட்டிவிட பட்டு, பாஜக ஒரு கூட்டணி, காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி, விஜய் தலைமையில் ஒரு கூட்டணி என வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் போது, காங்கிரஸ் கட்சி தென் மாநிலங்களில் அவுட்டாகி விடும், தவெக 75 முதல் 80 இடங்களில் வெற்றி பெற்றும், பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது, இதனால் கூட்டணி ஆட்சி அமைக்கவே சூழல் உருவாகும்.

இப்படியான சூழலை பயன்படுத்தி கொண்டு, எப்படி தமிழ்கத்தில் கூட்டணி ஆட்சியை தவெக அமைத்துள்ளதோ, அதே போன்று இந்தியா முழுவதும் உள்ள மாநில கட்சிகளின் துணை உடன் கூட்டணி ஆட்சியின் மூலம் பிரதமராக விஜய் பதவி ஏற்க அதிக வாய்ப்புள்ளது என்பதால், இந்த வாய்ப்பை நழுவ விட வேண்டாம் என்கிற முடிவில் முதல்வர் விஜய்யும் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here