8 மாஜி அமைச்சர்கள் கைது… திங்கள்கிழமை நடக்கும் சம்பவம்… விஜய் வெச்ச ட்விஸ்ட்…

0
Follow on Google News

சட்டசபை கூட்ட தொடரின் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசின் 116 நாள் ஆட்சி குறித்து சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் இதுவரை எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்கவில்லை என பேசிய உதயநிதி ஸ்டாலின்

மேலும், “முதலமைச்சரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கிறது; நன்றாகத் தயாராகி வந்து பதில் சொல்லுங்கள்” என்று உதயநிதி கூறினார். இதற்குப் பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், உறுப்பினர்கள் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் வரும் திங்கள்கிழமை தெளிவாக பதிலளிப்பேன் என பேசிய விஜய்.

மேலும் நான் இங்கே இல்லை என்றாலும் யார், யார் என்னென்ன கேள்வி கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்துவிடும். எல்லாத்துக்கும் நான் தெளிவாக பதில் சொல்கிறேன் என பேசிய முதல்வர் விஜய், மேலும் சபாநாயகரை நோக்கி உங்கள் சார்பாக அவர்களிடம் ஒரு ப்ராமிஸ் கேட்கிறேன். யாரும் எழுந்திருச்சி ஓடிவிடக் கூடாது என விஜய் பேசி இருந்தார். அதாவது, “திங்கள்கிழமை நான் பதில் அளிக்கும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேறாமல், நான் சொல்வதை முழுமையாகக் கேட்க வேண்டும்” என்ற தொனியில் விஜய் இந்த சவாலை முன்வைத்தார்.

இந்நிலையில் வரும் திங்கள்கிழமை முதல்வர் விஜய் என்ன பேச போகிறார் என்பது குறித்து தமிழகமே அவளோடு எதிர்ப்பது கொண்டிருக்க, மறுப்பக்கம் எதிர்க்கட்சியினர் அய்யோ என்ன பேச போகிராரோ முதல்வர் என கடும் பீதியில் இருக்கிறார்கள். இதற்கு இடையில் நடந்து கொண்டிருக்கும் சட்டசபை கூட்ட தொடர் முடிந்ததும் சுமார் 8 மாஜி திமுக அமைச்சர்களை கைது செய்ய ஆயத்த பணிகளில் முதல்வர் விஜய் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த திமுக ஆட்சியில் அமைச்சர்கள் துறை சார்ந்த அதிகாரிகளிடம் என்ன முறைகேடுகள் நடந்துள்ளது என்பதை ஆதாரத்துடன் ஆவணங்களை தயார் செய்து வைக்கும் படி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த அவங்களின் ஒரு டீசர் என்பது போன்று வரும் திங்க கிழமை முழுமையாக அது குறித்து பேசாமல், ஓரளவு டச் செய்துவிட்டு போவது போன்று லைட்டா பேச இருக்கிறார் முதல்வர் என கூறப்படுகிறது.

மேலும் சட்டசபை கூட்ட தொடர் முடிந்ததும் ஆவணங்கள் அடிப்படையில் எப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்ட இருப்பதாகவும், அந்த எப் ஐ ஆர் அடிப்படையில் அமலாக்கத்துறையை முன்னாள் மாஜி அமைசசர்கள் 8 பேருக்கு எதிராக திருப்பி விடும் வேளையில் முதல்வர் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே இந்த தகவல் முக ஸ்டாலின் கவனத்துக்கு சென்று இருக்கிறது.

இதனை தொடர்ந்து மூத்த தலைவர்களை அழைத்து முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தி இருக்கிறார், அப்போது மூத்த தலைவர்களும் பலரும் தங்களை பாதுக்காக்க என்ன பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள், ஆனால் பாஜக உடன் கூட்டணி வைத்தால், திமுக மொத்தமும் தமிழகத்தில் அடியோடு துடைத்து எறியப்பட்டு விடும் என்பதையும் ஸ்டாலின் வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார்.

ஆனால், திமுக டெல்லிக்கு காவடி தூக்கினாலும் சரி, கடந்த திமுக ஆட்சியில் நடந்த ஊழலை தோண்டி எடுத்து குறைந்தது 3 திமுக மாஜி அமைச்சர்களை சிறையில் அடைத்தால் தான் தமிழக மக்கள் என் மீது நம்பிக்கையை காப்பாற்ற முடியும் என்பதில் உறுதியாக இருக்கும் முதல்வர் விஜய், அதற்கான அணைத்து வேலைகளையும் துரிதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here