சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் இடையிலான முதல் நாள் சந்திப்பின் போது பல விசயங்களை பேசி கொண்டவர்கள், அடுத்த நாள் முதல்வர் விஜய் அமித்ஸாவுக்கு டிப்பன் பாக்ஸ் ஒன்றை கையில் கொடுத்தார், பலரும் உள்ளே சாப்பாடு இருந்தது, இல்லை இல்லை தமிழகத்தின் பாரம்பரிய மிக்க உணவை சமைக்கு கூடிய சமயல் பொருள் இருந்தது என்றெல்லாம் ஆருடம் தெரிவித்து இருந்தார்கள்.
மேலும் சிலரே முதல் நாள் விஜய் – அமித்ஷா சந்திப்பின் போது, கொளத்தூரில் கொத்து புரோட்டா போட்டு விட்டார்கள் என்று நீங்கள் பேசியதை கேட்டேன், அது என்ன கொத்து புரோட்டா என்று அமித்ஷா விஜய்யிடம் கேட்டதாகவும், அதற்கு அடுத்த நாள் , நீங்கள் கேட்ட கொத்து புரோட்டோ இது தான் என்று டிபன் பாக்சில் வைத்து விஜய் அமித்ஷாவிடம் கொடுத்ததாக ஒரு தகவல் பரப்பப்பட்டது.

ஆனால் இவை அனைத்துமே புரளி தான் என்றும் தற்பொழுது அமித்ஷா கைக்கு சென்ற டிப்பன் பாக்சில் என்ன இருந்தது என்கிற தகவல் அறிந்து, மொத்த திமுக கூடாரமும் ஆட்டம் கண்டுள்ளது என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அந்த டிபன் பாக்சில் ஒரு ஹார்ட் டிஸ்க் ஓன்று பேப்பரை சுற்றி டிப்பன் பாக்சில் வைத்து முதல்வர் விஜய் அமித்ஷாவிடம் கொடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த திமுக ஆட்சியில் நடந்த டாஸ்மாக் ஊழல், பத்திரப்பதிவு துறை ஊழல், என மொத்த உழலும் அமித்ஷா கைக்கு சென்ற அந்த ஹார்ட் டிஸ்கில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த டிப்பன் பாக்சில் உள்ளே ஹார்ட் டிஸ்க் வைத்து அமித்ஷாவிடம் கொடுத்த பின்பு சில முக்கிய விஷயங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஸாவிடம் ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதல்வர் விஜய்.
அதாவது , திமுக – பாஜக கூட்டணி வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, கடந்த திமுக ஆட்சியில் எவ்வளவு ஊழல் செய்துள்ளார்கள் என்கிற விவரம் இந்த ஹார்ட் டிஸ்கில் அடங்கியுள்ளது, மாநில அரசு நிச்சயம் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க இருக்கிறோம், நீங்கள் இது தொடர்பாக நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலவர் விஜய் அமித்ஷாவிடம் தெரிவித்ததாவும், அதற்கு அமித்சா நிச்சயமாக என்று பதில் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் கூட்டணி குறித்து நாங்கள் எதுவும் இப்போது முடிவு எடுக்கவில்லை, தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கிறது, அப்போது பார்த்து கொள்ளலாம் என்று திமுக – பாஜக கூட்டணி குறித்து விஜய் எழுப்பிய கேள்விக்கு அமித்ஷா விளக்கம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த வகையில் பாஜக – திமுக கூட்டணியை தடுக்கும் வகையிலே அமித்ஷா உடனான விஜய் சந்திப்பு இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் முதல்வர் விஜய்யிடம் இருந்து ஹார்ட் டிஸ்கை பெற்றுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அந்த ஹார்ட் டிஸ்க்ல் இருக்கும் ஆதாரங்கள் அடிப்படையில், திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் திமுக முதல் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுப்பாரா.? அல்லது அந்த ஹார்ட் டிஸ்கை வைத்து மிரட்டி திமுகவை வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணிக்கு பணிய வைப்பாரா.? என்கிற பரபரப்பும் நீடித்து வருகிறது.
மேலும் திமுக மாஜி அமைச்சர்கள் தங்கள் ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்றி கொள்வதற்காக பாஜகவுடன் திமுக கூட்டணி வைப்பது தான் சரியானது என திமுக தலைமைக்கு அறிவுறுத்தி வருவதாகவும், மேலும் இந்த பிரச்சனை திமுக மாஜி அமைச்சர்களுக்கு மட்டுமில்லை, திமுக முதல் குடும்பத்திற்கும் உண்டு என்பதால், பாஜக உடன் கூட்டணி வைத்து தங்களை காப்பாற்றி கொள்ள திமுக முன்னெடுக்க அதிக வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

