60 தொகுதிகளை கைப்பற்றும் விஜய்… மத்தியில் கூட்டணி ஆட்சி… பிரதமர் சி ஜோசப் விஜய்…

0
Follow on Google News

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரான இந்தி கூட்டணி தற்பொழுது சல்லி சல்லியாக உடைந்து கிடக்கிறது, இதற்கு முக்கிய காரணம், அந்த கூட்டணியில் உள்ள முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்களாக இருக்கும் மம்தா பேனர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் என முக்கிய தலைவர்கள் யாரும் மீண்டும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்ப்பாளராக முன்னிறுத்தி வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராக இல்லை.

குறிப்பாக மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்க கூடிய மாநிலங்களில் முதன்மை மாநிலமாக இருக்க கூடிய உத்திரப்பேரதேசத்தின் முக்கிய மாநில கட்சியின் தலைவராக திகழும் அகிலேஷ் யாதவ், தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2029 நாடளுமன்ற தேர்தலை சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார், அதாவது பத்து வருடங்களாக தமிழகத்தில் திமுக உடன் கூட்டணியில் இருந்த ராகுல் காந்தி.

அடுத்து ஆட்சி மாறியதும் திமுக முதுகில் குத்திவிட்டு கூட்டணியை விட்டு வெளியேறி தவெக உடன் இணைந்தார், அதே போன்று நம்மையும் ராகுல் காந்தி முதுகில் குத்த ரெம்ப நேரம் ஆகாது, முக்கூட்டியே ராகுல் காந்தியுடன் கூட்டணி உறவை துண்டித்து விட்டு தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2029 நாடளுமன்ற தேர்தலை சந்திக்க இருக்கிறார் அகிலேஷ் யாதவ் என்கிற தகவல் உத்திரபிரதேச மாநிலத்தில் இருந்து வெளியாகும் தகவல் உறுதி படுத்துகிறது.

இந்நிலையில் கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் 240 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று தனி பெரும்பான்மை இல்லாததால் கூட்டணி கட்சிகளின் துணை உடன் ஆட்சியில் உள்ளது, தற்பொழுது ஆட்சிக்கு வந்த பின்பு எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற முடியாமல் தவித்து கொண்டிருக்கிறது மத்திய பாஜக, இந்நிலையில் அடுத்து 2029 தேர்தலில் இதே 240 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறுமா என்கிற சந்தேகம் நீடித்து வருகிறது.

அந்த வகையில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனி பெரும்பாண்மை கிடைக்காத ஒரு சூழல் உருவாகலாம் என்பதால் மாநில கட்சி தலைவர்களான விஜய், அகிலேஷ் யாதவ் போன்றோர் இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடிவு செய்து , ராகுல் காந்தியை தூக்கி சுமப்பதை கைவிட்டு தங்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வரும் 2029 தேர்தலை சந்திக்க தயாராக இருக்கிறார்கள்.

இதில் யாருக்கு அதிக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைவசம் உள்ளதோ அவர்களுக்கு மற்ற மாநில கட்சிகள் ஆதரிக்கட்டும், என்கிற முனைப்பில் இருக்கிறார்கள் மாநில கட்சிகளின் தலைவர், அந்த வகையில் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா , கர்நாடக, பாண்டிச்சேரி ஆகிய தென் மாநிலங்களில் வரும் 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்தி களம் காண இருக்கிறார் முதல்வர் விஜய்.

தென் மாநிலத்தில் சுமார் 60 தொகுதிகளுக்கு மேல் தவெக வெற்றி பெற்றால், மத்தியில் ஆட்சி அமைக்க எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் மாநில கட்சிகள் ஒன்றிணைத்து 60 தொகுதிகளுக்கு மேல் கைவசம் வைத்திருக்கும் விஜய்யை பிரதமராக முன்மொழிய அதிக வாய்ப்புள்ளது என்பது தான் தற்போதைய தமிழக வெற்றி கழகத்தின் 2029 அரசியல் வியூகம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் வரும் 2029ல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு எந்த ரோலும் இருக்காது என்று சொல்லும் வகையில் மத்தியில் மீண்டும் 4கவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க வேண்டும் அல்லது மாநில கட்சிகள் ஒன்றிணைத்து மத்தியில் கூட்டாட்சி அமைக்க வேண்டும் என்கிற இரண்டு வாய்ப்புகள் உள்ளது என்பதால் முதல்வராக இருக்கும் விஜய் பிரதமர் நாற்காலிக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறது அரசியல் களம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here