எனக்கு எதுவும் தெரியாது நினைக்கிறீர்களா.? அமைச்சர்களை லெப்ட் ரைட் வாங்கிய CM விஜய்… கதி கலங்கி நின்ற அமைச்சர்கள்…

0
Follow on Google News

சமீபத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்பு நடைபெற்ற இரண்டாவது அமைச்சர் கூட்டம் இது, இந்த அமைச்சரவை கூட்டம் தொடங்கிய முதல், இறுதி வரையும் முதல்வர் விஜய் சற்று கராராகவே பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சரவை கூட்டம் தொடங்கியதும் ஒவ்வொரு அமைச்சரும் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், யார் யாரை சந்திக்கிறீர்கள்,

குறிப்பாக இரவு நேரங்களில் எங்கே தங்குகிறீர்கள் என்பது வரை எனக்கு ரிப்போர்ட் வந்து கொண்டு தான் இருக்கிறது, நீங்கள் செய்யக்கூடிய செயல் எதுவும் எனக்கு தெரியாது என்று மட்டும் நீங்கள் நினைத்து விட வேண்டாம் என்று முதல் விஜய் தன்னுடைய பேச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. குறிப்பாக விஜய் இந்த அமைச்சரவை கூட்டத்தை தொடங்குவதற்கு முக்கிய காரணம் உளவுத்துறை அதிகாரியாக இருக்கும் அஸ்ராக்காரக் முதலமைச்சர் விஜய்க்கு தாவெக அமைச்சர்கள் குறித்த கொடுத்த ரிப்போர்ட் தான் என்றும் தகவல் வெளியாகி உள்ளது .

அந்த வகையில் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய் உங்கள் ஒவ்வொரு அமைச்சரையும் நான் உன்னிப்பாக கண்காணிக்கிறோம் இல்லையோ, திமுக மிக தீவிரமாகவே கண்காணிக்கிறது, நீங்கள் யாராவது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்க மாட்டீர்களா என்று கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றிக்கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறது திமுக.

அதில் தற்பொழுது 10 அமைச்சர்களை தேர்வு செய்திருக்கும் திமுக அவர்களை ஏதாவது ஒரு ஊழல் புகாரில் வீடியோ ஆதாரத்துடன் சிக்க வைத்து அதை மிகப்பெரிய செய்தியாக்கி இந்த தாவெக அரசாங்கத்திற்கு மக்கள் மத்தியில் அவ பெயரை ஏற்படுத்தும் வேலைகளில் திமுக இறங்கி இருக்கிறது. அதே நேரத்தில் கடந்த இரண்டு மாதங்களாக அமைச்சர்கள் எந்தெந்த நட்சத்திர விடுதியில் இரவு தங்குகிறீர்கள்?

யார் யார் வீட்டிற்கு சென்று எந்தெந்த முக்கிய பிரமுகர்களை பார்க்கிறீர்கள், மற்றும் எந்தத்த முக்கிய பிரமுகர்கள் உங்களை சந்திக்கிறார்கள் என்பது வரையும் எனக்கு ரிப்போர்ட் வந்து கொண்டு தான் இருக்கிறது. அனைவருமே ரொம்ப கவனமாக இருங்கள், ஏதாவது ஒரு ஊழல் புகாரில் நீங்கள் சிக்கினால் எனக்கு நெருக்கமானவர்கள் அல்லது எனக்கு பிடித்தமானவர்கள் என்றெல்லாம் பார்க்க மாட்டேன்.

உடனே உங்களுடைய அமைச்சர் பதவியை விட்டு தூக்கி விடுவேன் என்று மிகக் கடுமையாக எச்சரித்த முதல்வர் விஜய், இது நான் உங்களுக்கு கொடுக்கும் வார்னிங் தான் , இதை புரிந்து கொண்டு அணைத்து அமைச்சர்களும் நடந்து கொள்ளுங்க என முதல்வர் விஜய் தெரிவித்து இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அமைச்சர்கள் அமைச்சர் வேலையை மட்டும் செய்யுங்கள், தேவையில்லாத சர்ச்சையில் சிக்கும்படி பேச வேண்டாம்,

மேலும் சில அமைச்சர்களின் நடவடிக்கை எதிர்க்கட்சிகளுக்கு ஆளும் நம்மை விமர்சனம் செய்வதற்கு ஏதுவாக இவர்களே வாய்ப்பை கொடுப்பது போன்ற அமைந்துள்ளது. இதெல்லாம் அடுத்தடுத்து நான் சொல்லிக் கொண்டு இருக்க மாட்டேன், பார்த்து ஜாக்கிரதையாக இருங்கள் உங்கள் ஒவ்வொருவரையும் நான் தீவிரமா உளவுத்துறை மூலம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

அதனால் எனக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து விட வேண்டாம் என்று மிகக் கடுமையாக அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் அமைச்சர்களை எச்சரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here