காங்கிரசை கழட்டி விடும் தவெக….மோடியுடன் தனியாக மோதும் விஜய்… சிங்கம் சிங்கிளா தானே மோதும்…

0
Follow on Google News

நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் தலைமையிலான தவெக எந்த கட்சியுடன் கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றது. சட்டசபை தேர்தல் முடிவுக்கு பின்பு முதல்வராக விஜய் அரியணை ஏறிய நிமிடம் முதல் தற்பொழுது வரை அவருக்கான செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறதே தவற குறைந்த பாடு இல்லை, இது அறை நூற்றாண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆட்சி செய்த திமுக – அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளையும் கலக்கம் அடைய செய்துள்ளது.

இந்நிலையில் வரும் 2029 நாடளுமன்ற தேர்தலுக்கான தமிழக அரசியல் கட்சிகளின் கூட்டணி குறித்தான தகவல் தற்பொழுது கசிந்துள்ளது, அதில் கடந்த 2014ம் ஆண்டு நாடளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா எடுத்த அதே பார்முலாவை முதல்வர் விஜய் கையில் எடுத்து எப்படி மோடியா – லேடியா என்று சவால் விட்டு தேர்தலில் சந்தித்து 37 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றி பெற்றது போன்று, தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டு 39 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவதற்கான திட்டத்தில் முதல்வர் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் தவெக உடன் கூட்டணியில் இருக்கும் விசிக, காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை என்ன என்கிற கேள்விகளுக்கும் தற்பொழுது விடை கிடைத்து இருக்கிறது. காங்கிரஸ் , விசிக , கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பிடித்து இருக்கும் தவெக இதுவரை விசிக , காங்கிரஸ் , கம்யூனிஸ்ட் ஆகிய காட்சிகளை முழுமையாக நம்பவில்லை.

மேலும் விசிக, காங்கிரஸ் போன்ற காட்சிகளை தவெக உடன் இனைத்து கொண்டது கடந்த 2026 சட்டசபை தேர்தலில் தவெக வுக்கு வாக்களித்த பெரும்பாலான மக்களுக்கு விருப்பம் இல்லை என்கிற ரிப்போர்ட் முதல்வர் விஜய் கவனத்திற்கு சென்று இருக்கிறது. இந்நிலையில் இதுவரை அதிமுகவில் இருந்து 6 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், மேலும் சுமார் 10க்கு மேற்பட்ட அதிமுக எம் எல் ஏ க்கள் அதிமுகவில் இருந்து விலகி தவெகாவில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் அடுத்து சுமார் 15 தொகுதிகளுக்கு மேல் நடைபெற இருக்கும் இடைதேர்தலில் 15 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, ஆனால் 10 தொகுதிகளுக்கு மேல் தவெக வெற்றி பெற்று விட்டாலே தனி பெரும்பான்மையுடன் தவெக ஆட்சி அமைத்து விடும், அப்போது அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் கூட்டணி கட்சிகள் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றவும் தவெக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் வாக்கு வாங்கியே இல்லாத காங்கிரஸ் கட்சியை தோளில் தூக்கி சுமக்க நாம் என்ன திமுக போன்ற ஏமாளியா மேலும் தொடர்ந்து நம்மிடம் முரண்பட்டிருக்கும் விசிகாவிடம் இருந்து விலகி இருப்பது தான் தவெகவுக்கு நல்லது என்கிற முடிவுக்கு வந்திருக்கிறார் முதல்வர் விஜய் என்கிறது தவெக வட்டாரங்கள். இதனை தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் புதுசேரி உட்பட 40 தொகுதிகளில் தவெக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

நேரடியாக மோடியா – இல்லை இந்த விஜயா என்கிற பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் முன்வைத்து 40 தொகுதிகளையும் தவெக கைப்பற்ற முடிவு செய்துள்ள நிலையில், திமுக உடன் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது என்றும், பாமக , அதிமுக , பாஜக போன்ற கட்சிகள் தனித்து கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்புள்ளது என்றும், இதில் காங்கிரஸ் கட்சி கடந்த 2014 போன்று யாரும் கூட்டணியில் சேர்க்காமல் தனித்து விடப்பட வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே வேளையில் திமுக – பாஜக கூட்டணி அமைதால் அந்த கூட்டணியில் பாமக , அதிமுக போன்ற கட்சிகள் இடம் பெற வாய்ப்புள்ளது என்றும், காங்கிரஸ் தலைமையில் விசிக , கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் ஒரு அணியாக கூட போட்டியிட வாய்ப்புள்ளது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது, எது எப்படியோ காங்கிரஸ் கட்சியை கழட்டி விட்டுட்டு தனித்து வரும் 2029 தேர்தலை சந்திக்க ஆயத்தமாகி விட்டார் முதல்வர் விஜய் என கூறப்படுகிறது.