தவெக ஆட்சி பொறுப்பேற்று 2 மாதங்கள் ஆனா நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு அமைச்சர்களின் நடவடிக்கைகளை மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார் முதல்வர் விஜய், குறிப்பாக உளவு துறை மூலமாக ஒவ்வொரு அமைச்சரையும் தனித்தனியாக கண்காணித்து ரிப்போர்ட் பெற்று வருகிறார், மேலும் கடந்த திமுக ஆட்சி காலத்தில் போன்று அமைச்சர்களுக்கு ஆதரவாக உளவு துறை செயல்பட கூடும் என்கிற சந்தகேமும் முதல்வர் விஜய்க்கு உண்டு.
அந்த வகையில் தவெக அமைச்சர்கள் குறித்து எந்த ஒரு சர்ச்சை செய்தி, எந்த மீடியாக்களில் வந்தாலும், உடனே தன்னுடைய கவனத்திற்கு கொண்டு வரவேண்டும் என தன்னுடைய உதவியாளர்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறார் முதலவர் விஜய் என்றும், அதன் படி, சர்ச்சைகளின் சிக்கும் அமைச்சர்களின் செய்திகளில் மிக சீரியஸாகவே கண்காணித்து வருகிறார் முதலவர் விஜய் என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

இந்நிலையில் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டம் முடிந்த உடன் தவெக அமைச்சரவையில் அதிரடி மாற்றம் அரங்கேற இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது, அதில் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ள கரூர் விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகிய இருவரும் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அதிமுகவில் இருந்து விலகி தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக வில் இணைய இருக்கும் சி வி சண்முகம் மற்றும் எஸ் பி வேலுமணி ஆகியோருக்கும் தவெக அமைச்சரவையில் இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக கரூர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை விஜயபாஸ்கர், எஸ்பி வேலுமணி, சி வி சண்முகம் ஆகியோர் அமைச்சராக பொறுப்பேற்று அடுத்து வரும் இடைதேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் தற்பொழுது முறைகேடு புகார், அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி மக்கள் மத்தியில் அவப்பெயரை பெற கூடிய அமைச்சர்களின் பதவியை பறிக்க முடிவு செய்துள்ள முதல்வர் விஜய் நடவடிக்கைகளில் 5 அமைச்சர்கள் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் அமைச்சர் கீர்த்தனா பெயர் முதலிடம் பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமைச்சராக பொறுப்பேற்று ரீல்ஸ் மூலம் முதலீடு ஈர்க்கிறேன் என விமர்சனத்துக்கு உள்ளான கீர்த்தனாவுக்கு அப்போதே முதல்வரிடம் இருந்து வார்னிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் ஆனால், அடுத்து சமீபத்தில் பள்ளியில் ஆய்வு செய்கிறேன் என்கிற பெயரில் அமைச்சர் கீர்த்தனா சிக்கிய சர்ச்சை மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது, இது முதல்வர் விஜய்யையும் கடும் கோபம் அடைய செய்ததாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அடுத்து அமைச்சரவை மாற்றத்தின் போது, கீர்த்தனா அமைச்சர் பதவி பறி போக வாய்ப்புள்ளது, அடுத்ததாக அமைச்சர் கில்லி சரத் குழந்தைக்கு மாத்திரையை பௌடர் ஆக்கும் வீடியோ என்று ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது, எதற்கு எதிர்க்கட்சிகள் போராட்டம் வரை சென்றனர், அப்போதே முதல்வர் தரப்பில் இருந்து கில்லி சரத் குற்றமற்றவர் என்று நிரூபிக்க கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது என்பதை கில்லி சரத்துக்கு தெரிவித்து இருக்கிறார்கள்.
மேலும் அதே சமயத்தில் கிள்ளி சரத் அமைச்சர் பதவியை பறித்தால் திமுக மிரட்டலுக்கு தவெக அரசு பயந்துவிட்டது என்பது போன்றாகிவிடும் என்பதால், உடனே அமைச்சர் கில்லி சரத் பதவி பறிக்கப்பட்டவில்லை. ஆனால் அடுத்து அரங்கேற இருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் கில்லி சரத்தின் அமைச்சர் பதவி பறிப்பதற்கான வாய்ப்புள்ளது என்கிறது கோட்டை வட்டாரங்கள்.

