திருமாவளவன் முதல்வர், சௌமிய அன்புமணி துணை முதல்வர் ஆவதற்கான அணைத்து வேலைகளும் நடந்த தகவல் தற்பொழுது வெளியாகி இருக்கிறது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, வெறும் 108 தொகுதிகள் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாமல் தவெக தவித்து கொண்டிருக்க , எந்த ஒரு சூழலிலும் விஜய் மட்டும் முதல்வராக கூடாது என நேரடியாகவே களம் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின்.
அதற்காக அதிமுக உடன் கை கோர்க்கவும் தயாராகவே இருந்து இருக்கிறார், முதலில் எடப்பாடி தரப்பில் நான் தான் முதல்வர் எனக்கு ஆதரவு தாருங்கள் என்று திமுகவிடம் கேட்க , அதற்கு பாஜக கூட்டணியில் இருந்து வெற்றி பெற்ற எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்று கொள்ள முடியாது என திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தெரிவித்தது, மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வராவதற்கு திமுக ஆதரவு கொடுத்தால் அது திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என திமுக மூத்த தலைவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை தொடர்ந்து தான் திமுக முக்கிய தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினிடம் ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள். அதாவது திருமாவளவனை முதல்வராக முன்னிறுத்தி திமுக ஆதரவு கொடுத்தால் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கிய பெருமை திமுகவுக்கு கிடைக்கும் என தெரிவிக்க உடனே உதயநிதியும் ஓகே சொல்லியிருக்கிறார், குறிப்பாக நாம் ஆதரவு மட்டும் கொடுப்ப்போம் அமைச்சரவையில் பங்கேற்க்க வேண்டாம் என்றும் உதயநிதி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து திருமவளவனிடம் திமுக தரப்பில் பேசப்பட்டு இருக்கிறது, மேலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதற்கு ஓகே சொல்லி இருக்கிறார்கள், தொடர்ந்து பாமக தரப்பில் பேசப்பட்ட போது, முதலில் திருமாவளவனை எப்படி முதல்வர் வேட்ப்பாளராக ஏற்று கொள்ள முடியும் என மறுத்தவர்கள், அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையின் போது, பாமக சார்பில் சௌமியா அன்புமணிக்கு துணை முதலவர் கேட்க அதற்கு பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதும் பாமகவும் திருமாவளவனை முதல்வராக்க ஓகே சொல்லியதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சர் சி வி சண்முகம் அவருடைய ஆதரவாளர்களுடன் சென்று எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசி இருக்கிறார், திமுக அமைச்சரவையில் பங்கேற்க்கமால் வெளியில் இருந்து ஆதரவு தருகிறார்கள், திருமாவளவன் முதல்வர், சௌம்யா அம்புமணி துணை முதல்வர், அதிமுகவினர் நாம் அமைச்சரவையை பங்கு போட்டு கொள்ளலாம் என்று சி வி சண்முகம் தெரிவிக்க.
நான் கை கட்டி நிற்க வேண்டுமா.? நான் முதல்வர் இல்லை என்றால் யாருக்கும் ஆதரவு இல்லை என அவர் முன்னாள் இருக்கும் டேபிளை தூக்கி டம் என்று போட்டிருக்கிறார், இதனை தொடர்ந்து எடப்பாடி மற்றும் சி வி சண்முகம் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் முற்ற, சி வி சண்முகம் எகிற சுற்றி இருந்தவர்கள் சி வி சண்முகத்தை சமாதானம் செய்து அழைத்து வந்திருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து புதியதாக அமையும் ஆட்சிக்கு வாழ்த்துக்கள் என எடப்பாடி பழனிச்சாமி எக்ஸ் தளத்தில் பதிவு செய்ய, கடைசி வரை காத்திருந்த திருமாவளவனுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று சொல்வது போன்று அவருக்கான முதல்வர் பதவி வாய்ப்பு கை நழுவி போனது, இதனை தொடர்ந்து தவெக அரசு அமைய ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் பங்கு பெற்றார் திருமாவளவன்.
எடப்பாடி பழனிசாமி முரண் பிடிக்காமல் திருமாவளவனை முதல்வராக சம்மதம் தெரிவித்து இருந்தால் அதிமுக தற்பொழுது அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும், அதிமுக என்கிற கட்சியும் உடைந்து இருக்காது, ஆனால் எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரம் இன்று அதிமுக என்கிற கட்சி தடம் தெரியாமல் சென்று கொண்டிருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரங்கள்.

