தமிழக்தின் நம்பகத்தன்மை போச்சு… ஆந்திராவுக்கு செல்லும் பன்னாட்டு நிறுவனங்கள்… பின்னணியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை…

0
Follow on Google News

ஒரு காலத்தில் தொழிலில் சிறந்து விளங்கும் மாநிலம் என்கிற பெயரை பெற்ற தமிழகத்திற்கு புதியதாக தொழில் தொடங்க பல பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுத்து வந்தன. ஆனால் தற்பொழுது புதியதாக தமிழ்நாட்டிற்கு நிறுவனங்கள் வரவில்லை என்றாலும் கூட, ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் நிறுவனகள் கூட தமிழகத்தை விட்டு வெளியேறி கொண்டிருக்கிறது. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த சுழலலை சாதுர்யமாக பயன்படுத்தி கொண்டு மிக பெரிய அளவில் பயனடைந்து வருகிறது ஆந்திரா.

சமீபத்தில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலை வைப்ப்பை உருவாக்க கூடிய வகையில் தூத்துக்குடியில் தொடங்கப்பட இருந்த பன்னாட்டு காலணி நிறுவனமான ஹ்வாஸுங் ஃபுட்வேர் குழுமம் ஆந்திராவை தேர்வு செய்துள்ளது. அதே போன்று சென்னையில் தொடங்கப்படன் இருந்த கூகுள் நிறுவனம் ஆந்திராவில் உள்ள விசாகபட்டினத்திற்கு சென்று இருக்கிறது. மேலும் தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி முதலீட்டில் வரவேண்டிய ஃபாக்ஸ்கான் நிறுவனமும் இடம் மாறியது.

அந்த வகையில் தொடர்ந்து புதிய ஒப்பந்தங்கள் தமிழகத்தை புறக்கணித்து வருவதும், ஏற்கனேவே இருக்கும் நிறுவனங்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவதின் பின்னணி காரணம், இந்தியாவில் செம்பு உற்பத்தியில் மிக பெரிய சக்தியாக இருந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பொருளாதார தாக்கம் தன என்கின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதற்கு முன்பு, மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 3 சதவிகித பங்களிப்பையும், இந்தியாவில் தாமிர உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் கொடுத்து வந்தது தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை, 2014–2018 நிதியாண்டில் மட்டும் தேசிய கருவூலத்திற்கு சுமார் ₹13,500 கோடி பங்களிப்பை அளித்தது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை.

மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் சுமார் 4 ஆயிரம் தொழிலார்கள் நேரடியாகவும், சுமார் 20 ஆயிரம் பேர் அதன் சார்ந்து பல்வேறு துறைகளில் பணியாற்றி வந்தனர். வேலைவாய்ப்பை உருவாக்கும் ஸ்டெர்லைட் ஆலை முடியபின்பே நிறுவனங்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்தது தமிழ்நாடு என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டால், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என்பதை தாண்டி, உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கும், மேலும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை சார்ந்து இருக்கும் சிறு குறு தொழில்களுக்கும் மீண்டும் உயிர் கொடுத்தது போன்று அமையும், இதை திமுக ஆட்சியில் செயல்படுத்தினால், மாநிலத்தின் தொழில் துறையில் மறுமலர்ச்சியை உண்டாக்கிய பெருமை முதல்வர் முக ஸ்டாலினுக்கு கிடைக்கும் என்கிறார்கள் தொழில்த்துறை வல்லுனர்கள்.

மேலும் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, தமிழகத்திற்கு புதிய நிறுவனங்கள் முதலீடு செய்ய முன் வரும் வகையில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மீண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால். அந்த வகையில் திமுக அரசாங்கம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அதி முக்கிய காரணமாக இருக்கும் தொழில்துறைக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதில் மூலம், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்பு அதை நம்பி இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றவர்கள் வாழ்வில் ஒளியேற்றிய வரலாற்று பெருமைக்கு உரியவராக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இருப்பார் என்கிறார்கள் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பின்பு வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here