போலி X கணக்குகள்…ராகுல்காந்திக்கு ப்ரோமோஷன் … பாக்கிஸ்தானில் இருந்து செயல்படுவது கண்டுபிடிப்பு…

0
Follow on Google News

சமூக வலை தளங்களில் இந்தியாவைவையும், இந்து மதத்தைதையும், குறிப்பாக மத்திய பாஜக அரசைசையும் குறிவை வைத்து வரும் தாக்குதல்கள் அனைத்தும் இந்தியாவில் இருந்து கொண்டு இது போன்ற பதிவுகளை செய்து வருகிறார்கள் என பலரும் நினைந்து கொண்டிருக்க அது உண்மையில்லை என்பது அம்பலமாகி உள்ளது. இது போன்ற பதிவுகளை செய்யும் X தளவாசிகள் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில் பெரும்பாலும், பாக்கிஸ்தான், வங்கதேசம், சவுதி அரேபிய, துபாய், ஓமான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவுக்கும் எதிராகவும், இந்து மதத்திற்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் பதிவு செய்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று விட கூடாது என்பதில் தீவிரமாக இருக்கும் வெளிநாட்டு குழுக்களின் வேலை தான் சமூக வலைத்தளத்தில் இது போன்ற பதிவுக்கு பின்னணியில் இருப்பது என கூறப்படுகிறது.

குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பதிவு செய்யும் ஐடி கள் எங்கிருந்து செயல்படுகிறது என ஆராய்ந்ததில் ஆதாரத்துடன் சில தகவல் சிக்கி இருக்கிறது, அதில் Muslim IT Cell” – West Asia வில் இருந்தும், ●“Abdullah”, “Diya Sharma”, “Yashita Nagpal” “Ounka” என்கிற ஐடிக்கள் Pakistan னில் இருந்தும், “Haraappan” என்கிற ஐடி பங்களாதேஷ்சில் இருந்தும், “Paramporul”, “Bhavna Joshi”, “Nidhi Singh Rathore” போன்ற ஐடி க்கள் அரபு நாடுகளில் இருந்தும், “Kunal Kamra”, “Cataleya” ஆகிய ஐடி க்கள் சிங்கப்பூரில் இருந்தும், Dhruv Rathee” ஐடி Europe இருந்தும் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவை குறிவைத்து இந்தியாவுக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வரும் இவர்கள் India in danger’, ‘democracy dead’, ‘BJP doing dictatorship’, ‘Hindu extremism’. போன்ற வார்த்தைகளை ஒரே மாதிரி பயன்படுத்தி வருவதும், மேலும் ஒரு ஒவ்வொரு நாளும் இவர்களின் பதிவுகளில் இருக்கும் ஒரே சாயம் போன்ற பின்னணியில் இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை அம்பலமாகி இருக்கிறது.

இதில் மற்றொரு அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கும் வகையில் பதிவு செய்யும் சமூக வலைதள கணக்குகள் பெரும்பாலும் வெளிபாடுகளில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தி எதாவது பேசினால் இந்தியாவில் இருப்பவர்கள் பெரிது படுத்தாமல் கடந்து சென்று விடுகிறார்கள், ஆனால் பாக்கிஸ்தான், பங்களாதேஸ் , அரபு நாடுகளில் இருந்து செயல்படும் சமூக வலைதள கணக்குகள் மிக பெரிய அளவில் ராகுல்காந்தியின் பேச்சை பிரமோட் செய்து வருவது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

இது போன்று வெளிநாடுகளில் இருந்து கொண்டு செய்யப்படும் இந்த கும்பலின் நோக்கம், ஒரே பதிவை copy-paste கும்பலாக சேர்ந்து அதை ட்ரெண்ட் செய்தால், இந்தியாவில் இருக்கும் மக்கள் சிலர் இது தான் உண்மை என நம்பி விடுவார்கள் என்கிற நோக்கத்தில் செய்லபடும் X தள ஐடி க்கள் இந்தியாவில் இருந்து செயல்படவில்லை, இது அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து செயல்படுகிறது என்பது உறுதியாகி இருக்கிறது.

இருந்தும் இது போன்ற வெளிநாட்டு சக்தியின் துணையுடன் இந்தியா மக்கள் ஏமாற்ற முயற்சித்தால், மக்கள் ஏமார்ந்து விடுவார்களா என்ன.? ஒவ்வொரு பதிவு யார் பதிவு செய்கிறார்கள், யார் பதிவு செய்தால் அந்த கருத்து உண்மையாக இருக்கும், யார் பதிவு செய்தால் அந்த கருத்து போலியாக இருக்கும் என்பதை நன்கு ஆராய்ந்து முடிவு செய்யக்கூடிய இந்திய மக்கள் மிக தெளிவாகவே இருப்பதால், அந்நிய சக்திகளின் உதவியுடன் நடக்கும் சதிகள் முறியடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here