2000 கோடி மோசடி… 5000 கோடி சொத்து … தீவிரமடையும் சோனியா , ராகுல் மீதான வழக்கு… குடும்பத்துடன் கூண்டில் ஏற்றம்…

0
Follow on Google News

இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய பொருளாதார முறைகேட்டில் ஒன்றாகக் National Herald வழக்கு அமைத்துள்ளது. இந்திய மக்களின் ஒவொருவரின் பணத்தை சுரண்டி எப்படி அவர்கள் தனிப்பட்ட ஒருவரின் கைக்கு கொண்டு சேர்ந்தார்கள் என்பதை வெளிச்சம் போட்டு காட்டும் குற்றசாட்டு தான் National Herald வழக்கு.

கடந்த ஏப்ரல் மாதம் நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது அமலாக்க இயக்குநரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. மேலும் குற்றப்பத்திரிகையில், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது₹1,000 கோடி ‘proceeds of crime’ என குறிப்பிட்டு, இந்த இந்த நிதிச் சுவடுகளில் சுமார் 5000 கோடி சொத்து அளவிற்கு இணைக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது.

 கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனம் என்கிற ஏஜேஎல் சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு, ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது.

அந்தச் சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. மீதமுள்ள ரூ.89.50 கோடி கடனை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கடந்த 2014ல் தொடர்ந்த இந்த வழக்கை அடிப்படையாக வைத்து சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும், சிபிஐயும் 2021ம் ஆண்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அமலாக்கத்துறை சோனியா காந்தி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் முக்கிய தலைவர்களிடம் நேரில் விசாரணை நடத்தியது.

அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அசோசியேட்டட் ஜர்னல் சுக்கு சொந்தமான ரூ.661 கோடி அசையா சொத்துக்களையும், ரூ.90 கோடி பங்குகளையும் அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது. இந்த விவகாரத்தில் ரூ.988 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கில் புதிய முதல் தகவல் அறிக்கையை டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஞாயிற்றுக்கிழமை பதிவு செய்துள்ளது. அமலாக்கத் துறை அளித்த புகாரின் பேரில் இந்த எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எஃப்.ஐ.ஆரில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருடன் மேலும் ஆறு பேரின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்த முடிவை டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கில் டிசம்பர் 16-ம் தேதி நீதிமன்றம் தனது உத்தரவை பிறப்பிக்க உள்ள நிலையில் இந்தியாவின் மிக பெரிய பண மோசடி வழக்கான நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கு தீவிரமடைய தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here